ஜனநாயக நாட்டிற்கு ஊழல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சிபிஐக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ யின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். அப்போது சிறப்புரையாற்றிய அவர்,
"கருத்தொற்றுமை மூலம் நாட்டில் எத்தனையோ நல்ல விஷயங்களை சாதிக்கலாம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இன்னும் நாம் மேன்மை அடைய வேண்டும். அதோடு சிறப்பான ஆட்சியை வழங்குவது ஒன்றே அரசின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.
ஜனாயக நாட்டில் ஊழல் ஒரு பெரும் அச்சுறுத்தலாகவும் போலீஸ், சிபிஐக்கு பெரிய சவாலாகவும் உள்ளது. ஊழலுக்கு உண்டான குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க விடாது என்பதில் கவனமாக இருந்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.




0 Responses to நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக ஊழல் உள்ளது : பிரணாப் முகர்ஜி சிபிஐக்கு எச்சரிக்கை!