இராமாணயத்தில் ஒரு கட்டம். வானரச் சேனையுடன் மறத் தமிழன் இராவணனின் இலங்காபுரிக் கோட்டையை கருமலை, செம்மலை போன்ற ஆரியச் சிங்கங்களான இராம இலக்குவர் சுற்றி வளைத்து விடுகிறார்கள்.
இந்த இடத்தில் கம்பன் எழுதிய வரிகள் வருமாறு.
“கறங்கு போல விற்பிடித்த காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய் இனிக் கிடந்து உறங்குவாய்” - இது கும்பகர்ணத் தூக்கத்திற்கு கம்பன் எழுதியதாயினும், இந்த வரிகளிற்கு குறைந்தது நான்கு அர்த்தங்கள் இருக்கும் என்பதை மனதிலிருந்தி வாசிக்கவும்.
ஏனென்றால் இலக்கிய அடிகள் ஒரிரு பொருட்களுடன் எழுதப்படுபவை அல்ல. இதை தமிழ் இனி மெல்ல….. என்ற பாரதியின் வரிகளோடு, தொடுத்துப் பார்த்தால் தமிழன் விழித்தாலும் ஒரே அடியாகக் கிடந்து காலா காலமாகக் கிடந்து உறங்க வேண்டிவந்துவிட்டது என கம்பனும் தமிழ் இனத்தையே எச்சரிப்பதாக எத்தனை பேரால் விளங்க முடியுமே எனக்குத் தெரியாது.
இன்னும் தமிழன் உறங்குகிறான் என்று என்றோ இலண்டனில் ஒலித்த வரிகளோடு, அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டு, ரொறன்ரோவில் அண்மையில் விருது வழங்கப்பட்ட ஒரு ஸ்கந்தவரோதயா பழைய மாணவரான டாக்டர் இரை மீட்ட சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாழ்தல் கண்டு சிந்தை இரங்காரடி கிளியே ….. என்பதும் ஞாபகத்திற்கு வருகின்றது.
இதேசமயம் ஒரு அமைப்பின் நிலைப்பாட்டை என்றுமே விளக்கிப் பேசும் பொறுப்பான ஒருவர் அமைய உள்ள ஈழ ஆட்சி ஜனநாயக ரீதியிலானதாகவே இருக்கும் என சாசனத்தை முறையறைய, அடுத்த கணமே அதே மேடையில் இன்னொருவர் சிறீலங்கா பாராளுமன்ற ஜனநாயகத்தை சாட ….அதுவும் அதைப் பதிவு செய்கிறேன் என ஆவணப்படுத்த….. இந்த மந்த நிலையில் சாதாரண அரசியலையே அலச இயலாத போது…..
பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும் என்றன் கட்டுடல் வளைந்து கை கால் தளர்ந்து கவலை மிகுந்தாலும் வாழ்வு கெட்டு நடுத்தெருவில் கிடந்து கீழ்நிலையுற்றாலும் மன்னர் தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர் துடைக்க மறப்பேனோ? என்று பாடிய காசி ஆனந்தன், நாற்பது ஆண்டுகளின் பின் எங்களைத் “மீண்டும் “ தட்டி எழுப்ப வேண்டியுள்ளதாயின்…..
இதை சொல்ல வரும்போது, சத்தியாக்கிரக அறப் போராட்டத்தை …….தமிழ் மறவர் படைதான் புலிப்படை என்று விழித்தெழ வைத்த காசி ஆனந்தனின் காலத்தை தெரிவிக்க வேண்டிய தேவை எழுகிறதென்றால்...ஆக அக்கறையும் அடிப்படை அரசியல் அறிவும் வரலாறும் ஞாபகத்தில் இல்லாத நம்மவரிற்கு…..
இந்தியா தன்னையே பணயம் வைத்தே சிறீலங்காவை ஆதரிக்கிறது என்று இந்திய அமைச்சரே தெரிவித்துள்ள நிலையிலான மந்திர ஆலோசனை நடாத்த வேண்டிய இன்றைய ஈழத் தமிழரின் அரச (ராஜ) தந்திர விழிப்புணர்ச்சி வேண்டிய நிலையில்……
சொல்ல வந்ததை விட்டு விட்டு, எதையுமே என்றுமே கண்டு கொள்ளாத நம்மவரிற்கு விழித்தல், காணல், பார்த்தல், கருத்தூன்றி அவதானித்தல், விழிப்பு, விழிப்புணர்ச்சி என்ற படி நிலைகளை விளக்க வேண்டிய அவல நிலையில் நம்மவரை எப்படி சர்வதேச தர, ஐ.நா மட்ட அரசியலிற்கும், திரு காரியவாசம் அவர்களின் ஆரியத் தொடர்பு வாசகங்களின் பின்னணிகளையும், அதாவது 1979 இல் என நினைக்கிறேன்.
தனது அனுபவத்தை வயதாகக் கொண்ட திரு ராஜீவ் காந்திக்கு ஹெலியில் பேராதனைக்கு அழைத்து சென்ற போது தனியாக வழங்கிய ஆரிய திராவிட உபதேசத்தையும் நினைத்தவாறு….. அடடா ….. நம்மவரிற்கு எப்படி புரிய வைப்பது என்றே தெரியவில்லை.
தலையங்கத்தில், உள்ள ஆழ்ந்த தூக்கம் என்பது அரச(ராஜ) தந்திரத் தூக்கத்தையும் அதன் தாக்கத்தையும் குறிக்கிறது என்பதை முதற் கண் தெரிவித்துக் கொள்ள வேண்டியுள்ளது. இது விவாதிக்க வருபவர்கள் தலைப்பை விளக்கிப் பேசுவதைப் போல இருக்கிறது.
சுருங்கக் கூறின், இன உணர்வற்ற உறங்கும் தமிழரை அடிக்கடி பறையடித்தோ, அடுக்கு மொழி வசனங்கள் பேசி விழித்தெழ வைத்து, பொங்கி எழ வைத்து துள்ளல் அரசியல் நடாத்தலாம். கோஜம் போடும் படி சொல்லியும் கொடுக்கலாம். அரச தந்திர மட்டத்தை மட்டும் எட்ட இயலாது.
ஏனென்றால் அரச தந்திரத்திற்கு அறிவை விட, ஒரு பண்பான பக்குவமும் நிதானமும், காலத்தை ஊடறுத்துப் பார்க்கும் பார்வையும் தேவை. இந்த நிறைவின்றி ராஜீக விடயங்கள் பற்றி பேசவோ எழுதவோ முடியாது. ஊர்ச் சங்க மற்றும் சமூக அமைப்புக்களின் யாப்புக்களிலும், புரியாத இறைமை என்ற வார்த்தையை உரிமைக்குப் பதிலாகப் போட்டு, உலக அரசுகளிடமிருந்து அந்நியப்பட்டு, தானே தன்னுடன் புசத்துவதைப் போல், தமிழர் தமிழரிற்கு தமிழில் உணர்ச்சி அரசியல் பாடம் நடாத்த வேண்டியது தான்.
எழுபதுகளில் உரும்பிராய்ச் சிவகுமாரனின் படத்தை கலைஞானி அடையாளத்துடன் கண்ட போது கண்ட “விழித்தெழு” என்பது இன்றும் தேவை என்றால்……. இனி விழிப்புணர்ச்சி என்றால் சும்மா தூக்கத்திலிருந்து விழித்தல் அல்ல, அத்துறையின் அதி உச்ச தத்துவார்த்த நிலையை புரிந்து கொண்டு ஆராய்தல் என அருவரி உச்சாடனத்திற்கு மண் போட …..இதற்குள் பாகிஸ்தான் என்றுமே உதவி வந்திருக்கிறது என்கிறார் மகிந்த.
அடுத்த செய்தித் தலைப்போ தனிநாட்டை பாரதீய ஜனத்தா ஆதரிக்கும் என்பதும், அதற்கு முன் திரு நாராணணயசுவாமி புலிகளை இந்தியா மறக்காது ஒரு போதும் மன்னிக்காது என்று இத்தனை ஆயிரம் அப்பாவித் தமிழர்களை கொன்று புதைத்த பின்பும் இந்தியா கூறுகிறதென்றால் நாங்கள் “இப்போ” என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்று சிந்திக்க ஆரம்பிப்பதே இனத்தை காக்கும் அரசன் பாணிச் சிந்தனையாகும்.
இந்த “இப்போ” என்பது தான் இடம், நேரம், காலம் என்பதில் வரும் நேரம், காலம் என்ற இரண்டு வார்த்தைகளையும் சுட்டுகிறது என்பதையும் அதன் நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்குள் கனடாவின், எதிர்க்கட்சியான லிபறல் கட்சியானது, கனடா தேசமானது, கொழும்பு பொதுநலவாய அமைப்பின் கூட்டத்தை பகிஸ்கரிக்க வேண்டும் என்று முரசறைந்துள்ளது.
ஆளும் பிரதமர் மாண்புமிகு திரு ஹாபர் அவர்கள் 2011 இலேயே அவுஸ்ரேலியாவில் இதைச் சொல்லிவிட்டார். ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் உள்ள மூன்றாவது கட்சியும் இதற்கு எதிர்ப்பு இல்லை. இன்னும் ஏன் தாமதம்? தடை தங்கல் எதுவுமில்லையே? இது தான் இன்று தமிழன் ஒவ்வொரு வரும் கேட்க வேண்டிய கேள்வி.
தமிழகத்தில் கலைஞர் ஐயாவும் முதல்வர் அம்மாவும் ஒன்றைத் தான் கேட்கிறார்கள். கனடாவில் உள்ள தமிழ்க் குழுக்களை ஒன்றாக்க ஒரு பிரதான அரசியற் புள்ளி வட்டமேசைக்கு அழைத்ததாம்.
குழுக்கள் அனைத்தும் ஒன்றாக வரவே இல்லையாம். கொள்கை வேறுபாடு ஆரோக்கியமானது. இனக் கொலையை எதிர்த்தல் என்ற தமிழ் இனத்தின் பொதுவான தேவையை ஒறறுமையாக எதிர்ப்பது அவசர அவசிய தேவை. இந்தியாவில் ரணிலும், நின்று “அனைத்துக்” கட்சியினரையும் சந்திக்கையில் நமது தமிழக் குழுக்களும், இரண்டான அரசுகளும் சிந்திக்க வேண்டும்.
ரணிலா மகிந்தவா ஜனாதிபதித் தேர்தலில் வெல்வார்கள் என்பதைக் கூட கணிக்க இயலாத ஆய்வை விட்டு விட்டு, ஆசன ஆசைகளையும் விட்டு விட்டு, ஒழுங்காக ஒரு சாசனத்தை நிறைவேற்ற எப்படி வாக்கெடுப்பை நடாத்துவது என்பதை அறிந்து கொண்டு இனியாவது நேர கால இடம் பார்த்து, தன் வலியறிந்து, மாற்றான் வலி அவன் துணை வலி அறிந்து கணித்து எதைச் செய்ய வேண்டும் அனால் எதை “இப்போ” சொல்லவே கூடாது என்பதைப் புரிந்து நாம் செயற்பட வேண்டிய காலமிது.
முடிவாக, அது கனடாவாக இருக்கலாம், தமிழகம் அக இருக்கலாம். எந்த வெளிநாடாகவும் இருக்கலாம் உலகளாவிய ரீதியில் ஒரு ஜனநாயக ரீதியிலான, இந்தக் கட்சிகள் குழுக்கள் எல்லாவற்றையும் அடக்கிய ஒரு தமிழர் பொது ஜனநாயக அமைப்பு தேவை.
அது நாம் தூங்குகின்ற போதும் நமக்காக செயறபடுகின்ற, சிறீலங்கா அரசால் கேலி செய்யப்படுகின்ற, நாட்டில் இருந்து துரத்தப்பட்ட உள்ளே நுழைய விசா மறுக்கப்பட்டவர்களை எல்லாம் இணைத்து அமைய வேண்டும்.
இதை யாராவது எற்றால் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா அவர்களின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு முயற்சித்துப் பாருங்கள். எழுதுபவர் மட்டும் எழுந்தால் போதாது. அனைவரும் எழ வேண்டும். ஒரே அணியில் இல்லாவிடினும் ஒற்றுமையாக..
kuha9@rogers.com

0 Responses to ஆழ்ந்த தூக்கத்தில் ஈழத் தமிழர்: பூநகரான்