பாலியல் குற்ற
நடவடிக்கைகளில் சிக்கி, குற்றவாளிகளாக உறுதி செய்யப்படுபவர்கள் மீது
மிகவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் போப்
பிரான்சிஸ். இது குறித்து இன்று வாடிகனில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் சர்ச்சின் பாதிரிகள், பொறுப்பில் உள்ளவர்களால், சிறுவர்களைப் பயன்படுத்தி மேற் கொள்ளும் பாலியல் குற்றங்கள் பெருகி வருவதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் இதனைத் தமது முக்கிய உரையாகக் குறிப்பிட்ட பிரான்சிஸ், சிறார்களைக் காப்பது மிக முக்கியப் பணி. பாதிரிகள் சிறுவர்களை வைத்து மேற்கொள்ளும் பாலியல் குற்ற நடவடிக்கைகளைத் தடுத்தாக வேண்டும்.
இது
போன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் சிறார்களுக்கு நிவாரணம் வழங்க
வேண்டும். இந்தக் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது அவசியம்
உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் போப் பிரான்சிஸ்.




0 Responses to பாலியல் குற்ற வழக்குகளில் சிக்கும் பாதிரிகள் மீது நடவடிக்கை உறுதி: போப்