டெல்லியில் காரில் கடத்தி சென்று ஒரு இளம்பெண் நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளார் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியின் அருகே உள்ள குர்காவுன் நகரில், கடை ஒன்றில், நேற்று முன்னிரவு பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அடுத்து நேற்று இரவு நடைபெற்ற இந்த சம்பவம் டெல்லி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்த சர்ச்சை மேலும் அதிகமாகியுள்ளது.




0 Responses to டெல்லியில் ஓடும் காரில் மீண்டும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் - மக்கள் அதிர்ச்சி!