தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பன்னாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் ஆதரவினையும் தொலைபேசிஊடாக வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள் எதிர்வரும் 5ஆம் நாள் பிரித்தானியாவில் ஒன்றுகூடும் புலம்பெயர்தமிழ்மக்களின் போராட்டத்திற் ஆதரவினை தெரிவிக்கின்றோம் விடுதலைக்கான மாணவர் அமைப்பு.
உலகெங்கும் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் புதிய நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது என்று அவுஸ்ரேலியா,ஜரோப்பியநாடுகள்,கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழ் மாணவர்கள் தமிழக மாணவர்களின் ஆதரவாக உண்ணாவிரதத்தினை நடத்தினார்கள் என்ற செய்தி எங்களை ஊக்கிவிக்கின்றது.
அதேபோல் பிரித்தானியாவில் நடைபெறும் பேரணி எங்களுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தந்துள்ளது
ஈழத்தமிழருக்கு அரசியல் ரீதியில் பொதுவாக்கெடுப்பு நடத்தி நல்ல தீர்வு கிடைக்கும் வரை தமிழக மாணவர்களின் போராட்டம் ஒயாது என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் அமைப்பின் தலைவர் தினேஸ் தெரிவித்துள்ளார்.




0 Responses to தமிழகத்தில் தொடரும் மாணவர் போராட்டம்! (காணொளி இணைப்பு)