ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த அமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.
பாலசுப்பிரமணியன் பேசியபோது,
இலங்கையில் இனவெறி சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்திய இனஅழிப்பு குறித்து பன்னாட்டு ஆய்வு நடத்தவேண்டும். தனி தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி இந்திய அரசை வலியுறுத்தவும், இலங்கை இராணுவம் தமிழக மீன்பிடி எல்லையில் தினந்தோறும் மீனவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை தடுத்து கடல் எல்லையை நிர்ணயம் செய்து, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது என்றார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து சிறப்புரை ஆற்ற வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இனவெறி தாக்குதலுக்கு எதிராக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை தேவை. தனி தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு. ஒரே இலங்கை. அதற்குள்ளே அரசியல் தீர்வு.
இலங்கையா? தனி தமிழ் ஈழமா என்பதை நிர்ணயிக்க தமிழர்களுக்கிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இன்று நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொள்ள வந்திருக்கிறேன் என்றார்.

0 Responses to தனி தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு: சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கோரிக்கை