கலிபோர்னியா மாகாண அட்டர் ஜெனரலாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மணியான கமலா ஹாரிஸை, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பொது மேடையில் புகழ்ந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நேற்று வாஷிங்டனில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய ஒபாமா, மேடையில் வைத்து கமலா ஹாரிஸை சராமாரியாக புகழ்ந்தார். அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர். சட்டத்தை நிலைநாட்டுவதில் மனோதிடம் மிக்கவர். மேலும் அவர் மிகவும் கவர்ச்சியானவர் என்றார்.
பொதுமேடையில் பெண்களின் அழகை வர்ணிப்பது ஒபாமாவுக்கு கண்ணியமான செயல் அல்ல என அமெரிக்க ஊடகங்கள் ஒபாமாவிற்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.
2004ம் ஆண்டு ஒபாமா தேர்தல் பிரச்சாரம் செய்த போதும், 2008ம் ஆண்டு தேர்தலின் போதும் ஒபாமாவின் தீவிர ஆதரவாளராக கமலா ஹாரிஸ் திகழந்தது குறிப்பிடத்தக்கது.




0 Responses to ஒபாமா புகழந்த கமலா ஹாரிஸ் இவர் தான்!