கோவை துடியலூர்
சுப்பிரமணியம்பாளையம் இ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன்
சோமன் (எ) சோமசுந்தரம் (வயது 36). இவர் பல்வேறு தனியார் கம்பெனிகளில் 6
மாதம், 3 மாதம் என நிரந்தரம் இல்லாத வேலை பார்த்து வந்தார்.
இந்த
நிலையில் இவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த 5 வருடங்களாக
சோமசுந்தரத்திற்கு பெண் பார்த்துள்ளனர். ஜாதகம் சரியில்லை, சரியான
வேலையில்லை என்பதால் பெண் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே
சோமசுந்தரம் கடந்த 2 வாரத்திற்கு முன்பு அவராகவே முன்வந்து திருமணத்திற்கு
பெண் தேடி அலைந்துள்ளார். எந்த பெண்ணும் கிடைக்காததால் மனவேதனையில்
இருந்தார்.
சம்பவத்தன்று
வீட்டில் இருந்த சோமசுந்தரம் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு
மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு
ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே
சோமசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து துடியலூர் இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.




0 Responses to திருமணத்துக்கு பெண் கிடைக்காத விரக்தி: கோவையில் வாலிபர் தற்கொலை