Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையான தமிழீழத்தினை உலகின் முன் முரசறையும் பொருட்டு சுதந்திர சாசனத்திற்கான கூட்டங்கள் மற்றும் சந்திப்புக்கள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன.

எதிர்வரும் மே-18ம்நாள் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமையவுள்ள தமிழீழ சுதந்திர சாசனமானது ஈழவிடுதலைப் போராட்டத்தின் திசையினை தீர்மானிக்கும் சக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா - ஐரோப்பா - அவுஸ்றேலியா என ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற தேசங்களெங்கும் இதற்கான பொதுக்கூட்டங்கள் சந்திப்புகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிகழ்வுகளில் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்தின் அவசியத்தினை விளக்கும் கையேடும் மற்றும் தமிழீழ சாசன உருவாக்கத்திற்கான மக்களின் கருத்தறியும் கேள்விக் கொத்துக்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை உலகத் தமிழர்கள் அனைவரும் பங்கெடுக்கும் பொருட்டு தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான http://tamileelamfreedomcharter.org/  இந்த இணையத்தளத்தில் சென்று இது தொடர்பிலான விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு இந்த இணைய வழியூடாகவே கருத்தறியும் கேள்விக் கொத்துக்கான பதில்களை இட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா:  நியூயோர்க்கில் ஞாயிற்றுக்கிழமை (07-04-2013) மதியம் 1 மணி முதல் 4 மணி வரை Gujarati Hall/ 100 Lakeville Rd /New Hyde Park/ NY 11040  எனும் முகவரியில் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான அறிமுக கூட்டமொன்று இடம்பெறுகின்றது
.
ஜேர்மனி:   பீலவீல்ட் நகரில் சனிக்கிழமை (06-04-2013) மாலை 6 மணிக்கு Bügerwache Rolandstr 16(Siegfriedplatz) 33615 Bielefeld  எனும் முகவரியில் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான அறிமுக கூட்டமொன்று இடம்பெறுகின்றது.

பிரான்சு:  சனிக்கிழமை (06-0-2013) மாலை 17 மணிக்கு 5 Place de Marché, ( Metro : ROBESPIERRE - Ligne : 9 ) எனும் முகவரியில் தமிழீழ சுதந்திர சாசனம் குறித்தான கலைஞர்களுக்கான சந்திப்பொன்று இடம்பெறுகின்றது.

பாரிசில் ஞாயிறு (07-04-2013)  மதியம் 15 மணிமுதல் எனும் Centre Social, 20 Rue Léon Giraud, 75019 Paris ( Mtreo : OURCQ - Ligne : 5)எனும் முகவரியில் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான தகவல் பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன.



0 Responses to அமெரிக்கா-ஐரோப்பா-அவுஸ்திரேலியா: புலம்பெயர் நாடுகள் எங்கும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்க கூட்டங்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com