இலங்கையின் நெடுந்தீவு கடற்பகுதியினில் வைத்து நேற்றிரவு மேலும் 26 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.இன்று அவர்கள் அனைவரும் ஊர்காவற்துறை நீதிவானின்; வாசஸ்தலத்தினில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்.சிறையினில் அடைக்கப்பட்டுள்ளனர்.பிடிக்கப்பட்ட அனைத்து இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 11ம் திகதி வரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை ஊர்காவற்துறை நீதிவான் வழங்கியுள்ளார்.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே இவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனது.பின்னர் இவர்கள் நெடுந்தீவு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டு நீதிமன்றினில் ஆஜர்படுத்தப்பட்டனர்.எனினும் அவர்களது மீன்பிடி படகுகள் கடற்படை வசமேயிருப்பதாக இந்திய மீனவர்கள் தரப்பினில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.கைது தொடர்பினில் யாழ்ப்பாணத்திலுள்ள துணைதூதுவராலயமூடாக குடும்பத்தவர்களுக்கு தகவல் வழங்க நீதிபதி பணித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற அங்கத்தவர் குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை வருகை தரவுள்ள நிலையினில் இக்கைது இடம்பெற்றுள்ளது. குறித்த குழுவினர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




0 Responses to நெடுந்தீவினில் மீண்டும்; இந்திய மீனவர்கள் சிறைப்பிடிப்பு!