பாகிஸ்தானில் மரணதண்டனை எதிர்நோக்கியிருக்கும் இந்திய சிறைக்கைதி சரப்ஜித் சிங் நேற்று லாகூர் சிறைச்சாலையில் சக கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
அவர் தற்போது தொடர்ந்து கோமா நிலையில் இருப்பதாகவும், லாகூர் ஜின்னா மருத்துவமனையில் அவர் தீவிர சிகிசைக்கு உட்படுத்தப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சரப்ஜித் சிங் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிகிச்சை அறை தற்காலிக ICU ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் காவூர் மற்றும் சரப்ஜித் சிங்கின் மனைவி இரு பெண் பிள்ளைகள் ஆகியோர் பாகிஸ்தானுக்கு செல்ல இந்திய தூதரகத்தின் ஊடாக அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள். அம்ரிஸ்தாரில்கிருந்து 50 கி.மீ தொலைவில் அவர்களது சொந்த ஊரான பிகிவைண்ட் இருக்கிறது. அங்கிருந்து தற்போது அம்ரிஸ்தாருக்கு புறப்பட்டு வந்திருக்கும் அவர்கள், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக குறித்த விசாவை எதிர்நோக்கியுள்ளனர்.
நாங்கள் இப்போது சரப்ஜித் சிங்குடன் அருகில் இருப்பதற்கு முனைகிறோம். இந்த ஆபத்தான நிலையில் அவருடன் யாராவது அருகில் இருக்க வேண்டியது அவசியம். சரப்ஜித் சிங்கின் தற்போதைய நிலைமை நமக்கு தொலைக்காட்சியின் ஊடாகவும், அவரது வழக்கறிஞரின் ஊடாகவும் மட்டுமே தமக்கு கிடைத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை சரப்ஜித் சிங்கின் மனைவிக்கும் தற்போது நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவரின் ஆலோசனை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Responses to சரப்ஜித் சிங் தொடர்ந்து கோமா நிலையில் : பாகிஸ்தான் செல்ல விசா கோரும் அவரது குடும்பத்தினர்