2001 ஆம் ஆண்டு செப்டபர் 11 ஆம் திகதி உலகை உலுக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் பயன்படுத்தப் பட்ட விமானம் ஒன்றின் லேண்டிங் கியர் (Landing gear) 11 வருடங்கள் கழித்து சமீபத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
மேன்ஹாட்டனுக்குத் தெற்கே இரட்டைக் கோபுரம் அழிந்த பின் உருவாக்கப் பட்ட அதன் அடிப்பாகமான Ground zero இற்கு அருகே அமைந்துள்ள 51 பார்க் பிரதேசம் மற்றும் 50 முர்ரே வீதிக்கும் இடையே ஓர் ஆளில்லா கட்டடத்திற்குப் பக்கத்திலுள்ள ஒரு சிறிய சந்தில் இது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதில் சர்ச்சைக்குரிய விடயம் என்னவென்றால் 51 பார்க் பிரதேசம் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தைக் கொண்டுள்ள ஒரு இடமாகும். இருவருடங்களுக்கு முன்னர் இங்கு இஸ்லாமியப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் இரு பல மாதங்கள் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்திருந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு முன்னர் அங்கு விரைந்த போலிசார் குறித்த கட்டடப் பகுதியில் இருந்து ஆட்களை வெளியேற்றியதுடன் அது ஒரு குற்ற சம்பவம் நிகழ்ந்த இடமாகக் கருதுவதற்கென அவ்விடத்தைச் சுற்றி கிரைம் லேபிள்களும் இட்டனர்.
மேலும் 2001 செப்டம்பர் 11 ஆம் திகதி தாக்குதல் நிகழ்ந்த பகுதியில் இருந்து குறிப்பிட்டளவு தொலைவில் இது மட்டும் எவ்வாறு தனியாக இந்த இடத்துக்கு வந்தது என்பது குறித்து போலிசார் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் சம்பவ இடத்துக்கு குறுகிய நேரத்துக்குள் வந்த அமெரிக்கப் புலனாய்வுத் துறையான FBI உம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் வந்து சேர்ந்ததுடன் தற்போது கிடைகப் பட்ட ஆதாரமான லேண்டிங் கியர் மூலம் இந்த முக்கிய தாக்குதல் குறித்த புதிய தகவல்கள் ஏதும் பெற முடியுமா எனவும் ஆலோசித்து வருகின்றனர். தற்போது கண்டு பிடிக்கப் பட்ட இந்த உபகரணம் 5 அடி நீளமானது என்பதுடன் இது போயிங் ரக விமானத்தில் பயன்படுத்தப் பட்ட ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Responses to அமெரிக்கா இரட்டைக் கோபுரத்தைத் தாக்கிய விமானத்தின் லாண்டிங் கியர் கண்டுபிடிப்பு