இலங்கை விடயத்தில் தங்களை பணயம் வைத்திருப்பதாக, இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மன் குர்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, இந்தியாவின் பல தரப்பிலும் இருந்தும் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.
இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்திருந்தது.
எனினும் தமிழக அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்திருந்தது.
இந்த விடயத்தில் இந்தியா தம்மை பணயம் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இலங்கை தொடர்பில் இந்தியா கொண்டுள்ள அக்கறை இலங்கை புரிந்துக் கொள்ளும் என்று நம்புகவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




0 Responses to ஆட்சியை பணயம் வைத்து இலங்கைக்கு ஆதரளிக்கப்பட்டது!– சல்மன் குர்சித்