Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநகரில் இரண்டு வெள்ளை இனத்தவர்கள் 24 மணி நேர உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி தஞ்சமடைந்து தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல ஈழத் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவரும் Christine Ophius மற்றும் சிங்கள இனவாத அரசுக்கெதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் Garry Holiday ஆகியோரே இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேர்த் நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்த அடையாள உண்ணாவிரதம் நாளை மாலை 6 மணிக்கு நிறைவடையும்.
உண்ணாவிரதம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே உண்ணாவிரதம் ஆரம்பித்த இருவர்களுடனும் இணைந்து பத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்ணாவிரதம் இருக்கும் Christine Ophius மற்றும் Garry Holiday ஆகியோரின் கோரிக்கைகளாவன:

1. மனித குலத்துக்கெதிரான போரை நடத்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை சர்வதேச விசாரணைக்குட்படுத்தி தண்டிக்க வேண்டும்.

2. இலங்கை மீது பொருளாதரத் தடை விதிக்கவேண்டும்.

3. தமிழர்களின் விருப்பத்தை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

0 Responses to ஆஸி.யில் இலங்கைக்கு எதிரான உண்ணாநிலைப் போராட்டத்தி​ல் குதித்த வெள்ளை இனத்தவர்கள்​!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com