ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனி ஈழ வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும் இன்று நடிகர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனித் தமிழீழம் ஒன்றே உரிய தீர்வு. அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டதால், அனைத்துத் தரப்பினரும் தனி ஈழத்துக்கு ஆதரவாகத் திரண்டு இருந்தனர்.
இப் போராட்டங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அனைத்து நடிகர்- நடிகைகளும் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர் .
இப்போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் தொடங்கியது. இதில் ரஜினி, . சத்தியராஜ் , அஜித்,ஜெயம் ரவி , சூர்யா, , விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ், ஜீவா, பரத், செந்தில் ,பிரகாஸ் ராஜ் ,ஆனந்தராஜ் ,பிரசாந்த் ,சிவா கார்த்திகேயன் ,
நடிகைகள் ராதிகா ,நமீதா ,லச்சுமி ,பாத்திமா பாபு ,தன்சிகா,கோவை சரளா உள்ளிட்ட முன்னணி நடிகை ,நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
மேலும் முன்னணி நடிகைகளும் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ரனர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இயக்குனர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் பங்கேற்கின்றனர் .
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்ற விதம், படங்களாக வெளிவந்த பிறகு அதுவரை தமிழ் உணர்வாளர்களின் போராட்டமாக இருந்தது மக்கள் போராட்டமாக மாறிவிட்டது.




0 Responses to ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் இன்று உண்ணாவிரதம்! (காணொளி, படங்கள் இணைப்பு)