Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


எமது அன்புக்குரிய தமிழ் ஊடகவியலாளர்களே!
உங்கள் அனைவரையும் நாடி வரும் இந்த அறிக்கை தரும் செய்தியை உங்கள் உணர்வுகளில் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
தமிழ் ஊடகங்கள் அனைத்தும் தமிழ் மக்கள் நலன் சார்ந்தும்,தாயக விடியல் நோக்கியும் பணியாற்ற வேண்டிய  நிகழ்காலத்தில்,ஜூலை மாதம் நடைபெறவுள்ள களியாட்ட நிகழ்வுக்கான கலந்துரையாடலில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

ஜூலை மாதத்தின் முக்கியத்துவம் கருதியும்,கரும்புலிகளின் தற்கொடையின் உயர்வு கருதியும்,தமிழ்மக்களின் உணர்வு கருதியும்,உங்களுக்கான கடமையினை வலியுறுத்தியும் கனடியத் தமிழர்களின் சார்பாகத் இத்தகைய சந்திப்புக்களைப் புறக்கணிக்குமாறு  நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

மக்களிளைக் குழப்பும் செயற்பாடுகள் எவற்றிற்கும் துணையாக நிற்க வேண்டாம் எனவும் களியாட்ட நிகழ்வுக்கான  ஆதரவினை வழங்குவதைத் தவிர்த்துக் கொள்வது தமிழ் ஊடகங்களின் பொறுபு;பு என்பதையும்  வலியுறுத்தும் அதே வேளை, இத்தகைய நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க முற்படும் அமைப்புக்களின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக எமது தேசம் சுமந்து நிற்கும் இன அழிப்பு வலி என்பது,பல்லாயிரக் கணக்கான மக்களின் மரணத்தினாலும்,தேடற்கரிய வரலாற்றுச் சின்னங்களின் சிதைவினாலும்,பெறுதற்கரிய நூலக,கல்விச் சாலைகளின் எரிப்பினாலும்,சான்றோர்களின் சாவினாலும்,திட்டமிட்டுச் செய்யப்படும் தமிழ்ப் பண்பாட்டுப் படுகொலைகளினாலும்,இனக் கலப்பினாலும்,இனவாத அரசின் அடக்குமுறைச் செயற்பாடுகளினாலும் தொடந்து கொண்டிருக்கின்றது.

எமது தேசத்தில் ஆடி மாதம்

என்பது,குருதியும்,கவலையும்,அழிப்பும்,எரிப்பும்,உயிர்ப் பறிப்பும் என்று கண்ணீருக்குரிய மாதமாகக் கவலை சூழ்ந்து நிற்கின்றது. இந்தக் கறுப்பு ஆடியில் கரும்புலி மில்லர்,தனது கரும்புலித் தாக்குதல் மூலம் உயிர் ஆயுதமாகி,முதற் கரும்புலியாகி எதிரியின் மனோ பலத்தைத் தகர்த்தெறிந்தான் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி,ஆடி மாதத்திற்குக் கரும்புலிகளின் மாதம் என்ற பெருமையைச் சேர்த்தான். இந்த ஒப்பற்ற நாள் ஜூலை 05 என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழீழ மண்ணுக்காகவும்,மக்களுக்காகவும்,தமது இன்னுயிர்களைக் கொடை செய்த மாவீரர்ளுக்குரிய வீர வணக்க நாட்கள் வணக்கத்துக்குரிய நாட்கள் என்பதையும்,அவர்களுக்குரிய எமது வழிபாடுகள் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதையும் நாம் அனைவரும் எமது  முதன்மையான கடமையாகக் கருதுகின்றோம்.

நாம் வாழ வேண்டும் என்பதற்காகத் தம்மைக் கொடை செய்த எமது மாவீரர்களுக்குரிய துயிலும் இல்ல,மாவீரர் நாள்,வீரவணக்க நாள் நிகழ்வுகளைத்  செய்ய முடியாத நிலையில்  தாயகத்தில்  எம் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களுக்காகவும்  புலம் பெயர்ந்து வாழும் நாம்,முக்கியமாகக் கனடாவில் வாழும் நாம் இத்தகைய எழுச்சி நிகழ்வுகளைச் செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களின் பலத்தைக் கண்டும்,எமது தொடர்ச்சியான தாயகம் சார்ந்த செயற்பாட்டுத் திறன் உணர்ந்தும்,இன்று தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழம் நோக்கிய பல்முனைப் போராட்ட வடிவங்களின் பேரெழுச்சியின் வேகம் கண்டும் சர்வதேசத்தின் அணுகுமுறை குறித்தும் பயம் கொண்ட சிங்கள,இனவெறி அரசு எம்மவரைத் துணையாகக் கொண்டு,  எமது ஈழ விடுதலை உணர்வை மழுங்கடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.

ஜூலை 05 என்பது,களியாட்ட நிகழ்வுக்குரிய நாள் அல்ல.கரும்புலி என்பவன் சாதாரணமானவன் அல்லன்.
ஊடகவியலாளர்களே!  மாவீரர்களுக்குரிய மகத்தான மாதங்களில்,ஈரநினைவுகளைச் சுமந்து நிற்கும் நினைவு வணக்க நாட்களில்,மரணித்த மக்களுக்கான துயர் பகிரும் நாட்களில்,உன்னதமான உயிர்க் கொடையை நினைவேந்தும் மாதங்களில் இன்றும்,எதிர் காலத்திலும் களியாட்ட நிகழ்வுகளைத் தவிர்ப்போம் என்று உறுதி எடுப்போம்.

முள்ளிவாய்க்கால் வரை நின்று களமாடிய எமது மாவீரர்களை,அவர் தம் தேச விடியல் நோக்கிய தணியாத தமிழீழத் தாகத்தை நாம் மனதில் என்றென்றும் நினைவில் கொள்வோம்.

மாவீரர்களின் இலட்சியம் நிறைவேறும் வரை,தொடர்ச்சியாக ஒன்றிணைந்து பயணிப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
கனடியத் தமிழர் தேசிய அவை
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்
தமிழ் இளையோர் அமைப்பு –கனடா
கனடா தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்
தமிழ் மகளிர் அமைப்பு. கனடா
கனடிய தமிழர் விளையாட்டுத்துறை
கனடியத் தமிழர் மத்தியம்
கனடியத் தமிழர் தகவல்
ரொறன்ரோ நடன ஆசிரியர் சங்கம்
கனடியத் தமிழர் ஊடகவியலாளர் இணையம்
அறிவகம் கனடா
தமிழக்கலை தொழில்நுட்பக் கல்லூரி - கனடா

0 Responses to கரும்புலிகள் நாள் தருமம் தலை தூக்கிய நாள். வீரர்கள் நினைவில் விளக்கேற்றும் திருநாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com