பாதுகாப்பு வலயங்களுக்காக கையேற்கப்பட்ட காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு
வழங்கும் போது, பாதுகாப்பு விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண வர்த்தக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறி;ப்பிட்டுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை மற்றும்
2009ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைத்த
யோசனைகளை மாத்திரம் கருத்தில் கொள்வது போதுமானதாக இல்லை எனவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு நிலைமை மற்றும் காணிகளை மீண்டும்
வழங்குதல் ஆகியன தொடர்பான பிரச்சனைகள், கலந்துரையாடல் அடிப்படையில்
தீர்க்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இடம்பெயர்ந்தவர்களின் காணிகளை மீண்டும் வழங்குவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்திடம் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வொன்றிற்கு வந்து நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற வரையறைக்குள் வரும் பட்சத்தில் சகல உரிமைகளையும் பாதுகாக்க முடியும். அரசியல் தீர்வொன்றில்லாமல், பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.சர்வதேச அழுத்தங்கள் மேலும் அதிகரித்து செல்லும் எனவும் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று மாலை ஜ.தே.கவினில் குடநாட்டு மக்களையும் அங்கத்துவம் பெற வைக்கும் வகையினில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினில் வைத்து அங்கத்துவப்படிவங்களையும் அவர் வழங்கியிருந்தார்.
யாழ்ப்பாண வர்த்தக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறி;ப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்தவர்களின் காணிகளை மீண்டும் வழங்குவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்திடம் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வொன்றிற்கு வந்து நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற வரையறைக்குள் வரும் பட்சத்தில் சகல உரிமைகளையும் பாதுகாக்க முடியும். அரசியல் தீர்வொன்றில்லாமல், பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.சர்வதேச அழுத்தங்கள் மேலும் அதிகரித்து செல்லும் எனவும் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று மாலை ஜ.தே.கவினில் குடநாட்டு மக்களையும் அங்கத்துவம் பெற வைக்கும் வகையினில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினில் வைத்து அங்கத்துவப்படிவங்களையும் அவர் வழங்கியிருந்தார்.
0 Responses to பாதுகாப்பு வலய விடயங்கள் - கவனம் தேவை! மீண்டும் ரணில் அடித்தார் அந்தர்பல்டி!