Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வெளிவரும் செய்திகளை நேற்று திட்டவட்டமாக நிராகரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

ஜனநாயகக் கட்சியொன்றுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளே கூட்டமைப்புக்குள்ளும் இருக்கின்றன எனவும், தமிழர் உரிமைகளை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் அவர்களுக்கு நியாயமான, நிலைத்து நிற்கக்கூடிய தீர்வைப்பெறும் தற்போதைய பயணத்தில் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பங்குதாரர்களும் மிக உறுதியான ஒற்றுமையுடனும் தெளிவான நோக்குடனும் இருக்கின்றனர் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுநாள் பேருரை நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.நியாயமான தீர்வைபெற்றுக்கொள்ளும்வரை இந்த சாத்வீகப் போராட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒதுங்காதென்றும் அவர் சூளுரைத்தார்.

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டிய தேவை உள்ளது. நியாயபூர்வமான, ஆக்கபூர்வமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைத்து நிற்கக் கூடிய தீர்வொன்றை நோக்கிய இதயசுத்தியுடனான பேச்சுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே உள்ளது எனவும் சம்பந்தர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to கூட்டமைப்பினில் பிளவில்லை! ஆணித்தரமாக கூறுகின்றார் சம்பந்தன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com