Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளது. 36.6% வீத வாக்குகளுடன் 121 ஆசனங்களை கைப்பற்றியது காங்கிரஸ்.  ஜனதா தளம், பாஜக என்பன 20% வீத வாக்குகளுடன் தலா 40 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பாஜகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தவருமான எடியூரப்பாவின் கட்சி 9.8% வீத வாக்குகள் பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.  நிலக்கரி ஊழல் தொடர்பிலான சிபிஐ அறிக்கையில் மத்திய அரசு தலையீடு செய்தமை, ரயில்வே துறை அமைச்சர் பன்சாலின் உறவினர்களின் முறைகேடுகள் என்பவற்றினால் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் கடும் அழுத்தத்தை சந்தித்துவந்த நிலையில் சற்று ஆறுதலாக காங்கிரஸுக்கு கர்நாடக வெற்றி கிடைத்திருக்கிறது.  அதோடு 14 வருடங்களுக்கு பிறகு கர்நாடகாவை  பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

தென் மாநிலங்களில் பாஜக முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியிருந்த ஒரே மாநிலமான கர்நாடகவில் பாஜக தற்போது கடும் தோல்வி அடைந்திருப்பதற்கு மாநில பாஜக கட்சி பிளவுபட்டமை, ஊழல் முறைகேடுகள் என்பன காரணமாகிப்போனதாக தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து கர்நாடக முதல்வர் பதவிக்கு அக்கட்சியின் சித்தராமையா, மல்லிகார்ஜுனா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

0 Responses to கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் : 14 வருடங்களுக்கு பிறகு பெரும்பான்மை வெற்றி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com