Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


5ம் நாளில்
பிரான்சில் தமிழ் மூதாளர்களால் தமிழின அழிப்பு நாள் மே 18 ன் நான்காவது ஆண்டினை முன்னிட்டு கடந்த 1ம் திகதி முதல் நடாத்தப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டம் போராட்டத்தின் 5ம் நாளில் பிரான்சில் வாழும் முதாளர்களில் ஒருவரான திருமதி. யோகேசுவரி அம்மா அவர்கள் தலைமையில்  முன்னெடுக்கப்பட்டது. காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடரினை மாவீரர் நளினி அவர்களின் சகோதரி ஏற்றி வைத்து அகவணக்கம் செய்யப்பட்டது. மாலை 6.00 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.பல வெளிநாட்டு மக்கள் கவனத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
6ம் நாளில்

பிரான்சில் மூதாளர்களால் முன்னெடுக்கப் அடையாள கவனயீர்ப்பு உண்ணமறுப்புப்போராட்டம் 6ம் நாளில் பிரான்சில் வாழும் மூதாளர்களில் ஒருவரான திருமதி. இராசம்மா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடரினை வீரவேங்கை அற்புதம் அவர்களின் சகோதரர் ஏற்றி வைத்திருந்தார். காலநிலை மாற்றத்தால் காலை முதல் மதியம் வரை பலத்த மழைக்கும், குளிருக்கும் மத்தியில் அன்னையரும் ஏனையோரும் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். மாலை 6.00 மணிக்கு பழரசத்துடன் நிறைவு பெற்றது. இன்றை நாளில் தமிழர் மனிதவுரிமைகள் மையத்தின் செயலாளர் திரு. கிருபா அவர்களும், மற்றும் செவிலியர் விருது பெற்றவரும், பேராசிரியரும்,தமிழின உணர்வாளர் திரு. யூலியா அவர்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
7ம் நாளில்
பிரான்சில் நடைபெற்று வரும் கவனயீர்ப்புப்போராட்டத்தின் 7ம் நாளில் காலை10.00 மணிக்கு தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் தலைமையில் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் தொடங்கப்பட்டது. தமிழ் இளையோர்களால் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு கையெழுத்துகளும் பெறப்பட்டது. மாலை 6.00 மணிக்கு பழரசத்துடன் கவனயீர்ப்புப்போராட்டம் நிறைவு பெற்றது.

0 Responses to பிரான்சில் நடைபெற்று வரும் கவனயீர்ப்புப்போராட்டத்தின் 7ம் நாளில்....

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com