இத்தாலியில் தமிழ் மக்கள் கணிசாக வாழும் முக்கிய நகரங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் ஒன்றியம், ஈழத்தமிழர் மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவை இணைந்து முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களிற்கு சிங்கள அரசால் யுத்த விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையில் கொலலப்பட்ட எமது மக்களிற்கும் இறுதிவரை களமாடி வீரச்சரவடைந்த அனைத்து போராளிகளுக்குமான நான்காம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகளும், கவனயீர்ப்பு போராட்டங்களும் நடாத்தினர்.
பலெர்மோ
18.05.2013 அன்று பிற்பகல் 4 மணியளவில் பியாச்சா பொலித்தியாமாவில் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. பெருந்திரளான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு மாவீரர்களுக்கும் மக்களுக்கும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர் இந் நிகழ்வில் 2ம் லெப்.மாலதி கலைப்பள்ளி மாணவிகளின் நடனம் மற்றும் சிறப்புரைகள் மற்றும் இத்தாலியப் பிரதிநிதிகளின் கருத்துரைகளும் இறுதியில் உறுதி எடுத்து நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிகழ்வுகள்யாவும் இனிதே நிறைவுற்றது
நாப்போலி
19-05-2013 அன்று பிற்பகல் 4 மணியளவில் தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி இன அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளிற்கு சுடர் வணக்கம் , மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சிறப்புரை, கவிதை, எழிச்சி நடனங்கள், முள்வாய்கால் நிகழ்வின் நான்காம் ஆண்டு நினைவு தொடர்பாக நடாத்தப்பட்ட ஓவியப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது. சம நேரத்தில் இத்தாலி மக்களிற்கு இனப்படுகொலை தொடர்பாக பரப்புரையும் மேற்கொள்ளப்பட்டது.
பொலோணியா
19-05.2013 அன்று பொலோணியா நகரில் தாயகத்தில் எமது உறவுகளிற்கு சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளை சிரமதான பணியூடாக மேற்கொள்ளப்பட்ட பரப்புரை மூலம் வெளிப்படுத்தப்பட்டது.
றெஜியோ எமிலியா
19-05-2013 அன்று றெஜியோ எமிலியாவில் முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நான்காம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு நிகழ்வும் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மலர் செலத்தினர். இத்தாலி அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
ஜெனோவா
முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளிற்காக பிரார்த்தனை நடாத்தப்பட்டது.
லேச்சே
தமிழினப்படுகொலை தொடர்பாக அரசியல் சந்திப்புக்கள் நடாத்தப்பட்டது.
வியல்லா
18-05-2013 அன்று காலை 9.30 மணிக்கு தேசியக்கொடியேற்றல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. மாலை 3.30 மணியளவில் பிறாதிறிவேறே கத்தோலிக்க தேவாலயத்தில் ஆரம்பித்த பேரணி 4.00 மணியளவில் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறும் இத்தை வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மக்கள் இன அழிப்பு , தேசியச்சின்னங்களை தாங்கிய பதாகைகளை தங்கிச்சென்றனர். பேரணியில் திறிவேரே துணை முதல்வர் அவர்களும் இத்தாலிய மக்களும் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது. நினைவு வணக்க நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரை திறிவேரோ முதல்வர் திரு பியசேத்தி அவர்கள் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மலர்வணக்கம், சுடர்வணக்கம் நடைபெற்றது. தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் திறிவேறோ நகரசபை நிர்வாகமானது தமிழ்மக்களின் துயரங்கள் போக தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக உறுதி கூறினார்.
இத்தாலிய மனித உரிமை செயற்பாட்டாளர் திரு பாபியோ உரையாற்றும் போது இந்நிகழ்வுகள் இறந்தவர்களை நினைத்து கவலை கொள்வது அல்ல இவற்றிற்குரிய நீதி கிடைப்பத்கு உளைக்க வேண்டும் என்று கூறிய கருத்து எல்லோரையும் சிந்திக் வைத்தது. சிறப்புரை , கவிதை , பேச்சுக்கள் இடம்பெற்றன. சிறப்பாக சென்நெருப்பு நாள் தொடர்பாக திரு காசி அண்ணா வழங்கிய விளக்கவுரை காணொளியில் காண்பிக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் தேசியக்கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் படலுடன் உறுதியுரையுடன் நிகழ்வுகள் சிறப்பாக நிறைவடைந்தது.
0 Responses to இத்தாலியில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் 2013