Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தாயகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன  ஒடுக்குமுறைக்கெதிராகவும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் .  நெதர்லாந்து நாட்டு மக்களுக்கானதும். நெதர்லாந்தைச்சேர்ந்த ஊடகங்களினதும். ஆதரவைத் அம்ஸ்ரர்டாம்நகரை சேர்ந்த சூரி. உத்ரெக்த் நகரை சேர்நத விமல் ஆகிய இருவர்களால் நடை பயணம் ஒன்று நேற்று அம்ஸ்ரர்டாம் நகரிலிருந்து    ஆரம்பிக்கப்பட்டது. 

இரண்டாம் நாளான இன்று(15-05-2013)  காலை 11:15 மணியளவில் இவ் இருவர்களால்  நெதர்லாந்தின் பிரபல ஊடகமான நொஸ் (Nழுளு) தொலைக்காட்ச்சி நிறுவனத்திடம் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் மையம் , சனல்4 போன்ற நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளும் காணெளிக்காச்சிகள் அடங்கிய கோவை ஒன்று கையளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  நடைபயணத்தை ஹில்வர்சம் மீடிய பாரக்;கிலிருந்து தொடர்ந்தனர்   இவ் நடைபயணம் இன்று மாலை மைதிரக் நகரை சென்றடையும்.

நெதர்லாந்து தமிழர் பேரவை.

0 Responses to தமிழ் இனஅழிப்புநாள் மே18 ஐ முன்ட்டு நெதர்லாந்தில் நடைப்பயணம் - இரன்டாவது நாளில்... (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com