Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி, குத்தி காயப்படுத்தியுள்ளார்.  இந்த சம்பவம் நேற்று) இரவு 9.14 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைப்பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  மரியவத்தை தமிழ் கிராமத்திற்குள் நுழைந்த சிங்களவர்கள் சிலர், 15 தமிழ்களுடைய வீடுகளை அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலின்போது காயமடைந்த தமிழர்களான ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு

'முதலில் எமது வீட்டை தாக்கினர். அனைத்தையும் அடித்து நொருக்குமாறு நகரசபை தலைவர் கூறியதாக தெரிவித்தே தாக்கினர். சமிந்த, லால், லாலின் மகன் ஆகியோர் எமது வீட்டை தாக்கினர்.என தமிழ் பொதுமகன் ஒருவரும் 'தமிழர்கள் அனைவரையும் அடித்து கொலை செய்யவும் என தலைவர் கூறியதாக சொல்லியே தாக்கினர். வீடுகளை உடைத்தனர். நாம் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு ஓடி ஒழிந்துவிட்டோம். 12, 15 பேர் வந்தனர். இரும்பு, வாள், கத்தி என்பனவற்றை வைத்திருந்தனர். ஏன மற்றொரு தமிழரும் தெரிவித்தார்.

இது மகிந்த மாத்தியாவின் ஊர். அவருடைய ஊராக இருந்து ஜாதி, இன, பேதம் இல்லை என கூறினாலும் அதுபோன்று நடப்பதில்லை. சரியாக உழைத்து சாப்பிட முடியவில்லை. எந்த நேரத்தில் நெருப்பு எரியும் என்ற அச்சத்தில் சரியாக தூங்குவதும் இல்லை. இவை கஸ்டப்பட்டு வாங்கிய பொருட்கள் இவற்றுக்கு யார் நட்டஈடு வழங்குவது.''தமிழ்.. தமிழ்.. என்று சொல்லிக்கொண்டு மக்களின் வீடுகளை நாளாந்தம் உடைக்கின்றனர். குடித்தால் இங்குதான் வருவர். மகிந்த இதனை பார்க்க வேண்டும். நாங்கள் தமிழர்கள் தங்காலையில் எமக்கும் உரிமை உண்டு.  எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

0 Responses to தமிழ் தமிழ் எனக்கூறியவாறே தாக்கினர்! தங்காலையினில் தாக்கப்பட்ட மக்கள் வாக்குமூலம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com