Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”



18.05.2013 மாலை 17.00 மணிக்கு இன அழிப்பு நாள் நினைவேந்தல் பேரணி ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைத்தின் அருகாமையிலுள்ள சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளமன்றத்தை சென்றடைந்தது. பாராளமன்றத்தின் முற்பகுதியில் முள்ளிவாய்கால் பெரும் நெருப்பில் கொண்ட கொள்கைக்காக பெரும் புயலை எதிர்கொண்டு வீரகளமாடிய வேங்கைகளுக்கும் அவர்களின் கேடயமாய் நின்று மானப்போர் புரிந்த மக்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஈழத்தமிழ் அவையினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கரம்கோர்த்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

ஈழத்தில் சிறீலங்காவாலும் அதர்க்கு முண்டுகொடுத்த கொடுத்துக்கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளாலும் பல்லாயிரம் மக்கள் உலகத்தால் தடை செய்யப்பட்டட ஆயுதங்களால் கொத்துக்கொத்தாக குதறி எறியப்பட்ட கோரநாளின் நினைவுகளை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எங்கிருந்தாலும் எங்கள் மூச்சு இருக்கும்வரை கந்தக்குண்டுகளால் ஏரிக்கப்பட்ட எங்கள் வீரர்களினதும் மக்களினதும் கனவுகளை நனவாக்குவதே நமது கடமை என நம்பிக்கையோடு மக்கள் பேசிய கருத்துக்களையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை இந்நிகழ்வில் நோர்வே ஆழும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டு தமிழ்மக்களுக்கான அரசியல் அங்கிகாரம் கிடைக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததோடு சிறீலங்கா அரசு சனநாயகத்தை மதிக்கபழகவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை இந்நிகழ்வின் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்ட பேராசிரியர் வீபர்யூட் பெனாண்டோஸ் பேசுகையில் நாங்கள் இங்கு கூடியிருப்பது இன அழிப்பையும் கவலையையும் வெளிப்படுத்துவதர்;காக மட்டுமல்ல அதர்க்கும் மேலாக எமது ஆன்மாவில் இரண்டற கலந்திருக்கும் இலட்சியத்திற்காகத்தான் எமது போராட்டம் தொடர்கிறது அத்தோடு இன அழிப்பில் சிறீலங்கா மட்டுமல்ல மனிதநேயம் பேசும் இந்தியா அமேரிக்கா நோர்வே பிருத்தானியா மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கும் பெரும் பங்குண்டு என்பதை தெரிவித்ததோடு இவர்களின் துணையில்லை என்றால் ஒருபோதும் விடுதலைப்புலிகளை சிறீலங்காவால் அசைக்கமுடியாது அதனால்தான் சமாதானம் என்ற ஆயுதத்தை சர்வதேசத்தின் துணையோடு கையில் எடுத்து விடுதலைப்புலிகளையும் மக்களையும் பிரித்தாளும் சூட்சுமங்களில் ஒன்றாக அமேரிக்கா பிருத்தானியாவின் உந்துதலால் விடுதலைப்புலிகள் மீதான ஜரோப்பியத்தின் தடை அமைந்தது.

எனவே நீங்கள் மனிதர்களை அழிக்கலாம் தமிழீழத்தின் தடங்களை கனரக வாகனங்கள் கொண்டு தகர்க்கலாம் ஆனால் தமிழரின் தாகம் தமிழீழ தாகம் என்ற உன்னத இலட்சியத்தை எந்த கொம்பனாலும் அழிக்கமுடியாது அது ஆன்மாவின் பலமாய் இருக்கிறது.ஏன தெரிவித்த அவர் பூக்களை எத்தனை முறை பறித்தாலும் வசந்தகாலம் வரத்தான் செய்யும் என்ற நம்பிக்கை தரும் கருத்தையும் பதிவுசெய்தார்.


0 Responses to நோர்வேயில் நடைபெற்ற இன அழிப்பு நாள் நினைவேந்தல்! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com