Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.

அண்மையில் 'நாம் தமிழர்’ இயக்கத்தின் நான்காம் ஆண்டு விழாவுக்காகத் தமிழகம் வந்தவரிடம் விகடன் நிருபரினால்,...''ஈழப் போராட்டம் தோல்வியடைந்து விட்டதா? ஈழப் போராட்டத்தின் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற வினா எழுப்பப்பட்டது.
அவா் வழங்கிய பதிலில்,

இலங்கையில் தமிழ் பேசியதாலேயே இனப் படுகொலை ஒன்றின் மூலமாக இலங்கைத் தமிழர்களின் இன விடுதலை ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால், அந்தத் தமிழர்களின் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை.

ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல்.

அதை ஒருபோதும் அழிக்க முடியாது. மதச் சார்பற்ற வகையில் மக்கள் சமூகங்கள் ஒன்றிணைந்து அஹிம்சை வழியில் தங்களின் கோரிக்கைக்காகப் போராட வேண்டும்! இவ்வாறு பதிலளித்தார் அந்த விடுதலைப் போராளி தலைவா் யாசின் மாலிக்.

0 Responses to தமிழா்களின் ஈழப் போராட்டம் முடிந்து விடவில்லை!- காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com