Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரக்காணத்தைச் சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வம் என்பவர், லாரியில் உப்பு ஏற்றிக்கொண்டு செய்யாறில் இறக்கிவிட்டு திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலையில் திரும்பிச் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயம் அடைந்து மயக்கமடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பாமகவைச் சேர்ந்தவர்களே இச்சம்பவத்திற்கு காரணம் என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் பிரிவிணைவாதத்தை தூண்டியதன் பேரில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என்று திண்டிவனம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதாகர், பிரம்மதேசம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் அன்புமணி ராமதாஸ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்மந்தமாக திண்டிவனம் நீதிமன்றத்திற்கு அன்புமணி ராமதாஸ் அழைத்து வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2012ம் ஆண்டு நடந்த சித்திரை திருவிழாவில் நேரம் கடந்து பேசியதாக தற்போது அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Responses to அன்புமணி ராமதாஸ் மீது பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com