Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடுகளை ஏற்பாடு செய்வது தொடர்பிலான ஆலோசனை குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்பு இலங்கையை சேர்ந்த சமித்ரி ரம்புக்வெல என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவின் புதல்வியாவார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை தூதரகத்தின் இரண்டாவது செயலாளரான சமித்ரி ரம்புக்வெலவிற்கே தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2013 மற்றும் 2014ஆகிய ஆண்டு கால பகுதியில் குழுக்களின் தலைமையை இவர் வகிக்கவுள்ளார்.

இந்த நியமனத்திற்காக ஆசிய பசுவிக் அரச குழுவின் அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் இந்த குழுவிற்கான உறுப்புரிமை இந்த வருடமே இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.  இந்த குழு நியமிக்கப்பட்ட பின்னர் மிகக் குறைந்த வயதில் தலைமை பொறுப்பை சமித்ரி ரம்புக்வெல்ல ஏற்றுக்கொண்டுள்ளார் என் அரச தரப்புக்கள்  தெரிவிக்கின்றன.

0 Responses to ஹெகலிய ரம்புக்வெலவின் புதல்வி ஜ.நா ஆலோசனை குழுவிற்கு தலைவியாம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com