Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


ஈரோடு துப்பறியும் நாய் படைப்பிரிவில் டைகர் என்ற நாய் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்த இந்த நாய், 2002-ம் ஆண்டு முதல் துப்பறியும் பிரிவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தினமும் அரசு சார்பில் ரூ.85 படியாக வழங்கப்பட்டு வந்தது. 2011-ம் ஆண்டில் இந்த நாய் ஒய்வுப்பெற்றப்பின் படித்தொகை ரூ.45 ஆக குறைக்கப்பட்டது.

இருப்பினும் துப்பறியும் நாய்ப்படைப்பிரிவு பராமரிப்பில் இருந்தது.சில மாதங்களுக்கு முன்பு இந்த நாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கால்நடை பராமரிப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தது.இதையடுத்து துப்பறியும் நாய்ப்படைப்பிரிவு வளாகத்திலேயே 4 அடி குழி தோண்டப்பட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டு நாய் புதைக்கப்பட்டது. இந்த நாய்க்கு துப்பறியும் படைப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் வீரவணக்கம் செலுத்தினர்.
இந்த டைகர் நாய் 3 மாத குட்டியாக இருந்தபோது போலீஸார், அதை வாங்கி துப்பறியும் பயிற்சியை சென்னையில் அளித்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நாய், துப்பு துலங்காத பல வழக்குகளில் தடயங்களை கண்டுபிடிக்க உதவியாக இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கவுந்தப்பாடியில் வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் திருடு போன வழக்கில் போலீஸார் பல மாதங்களாக துப்பு கிடைக்காமல் திணறி வந்தனர். அப்போது இந்த நாய் அந்த வீட்டின் உரிமையாளர் மகனை கவ்விப்பிடித்து துப்புதுலங்க பேறுதவியாக இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

0 Responses to துப்பறியும் நாய் திடீர் மரணம் : சிறப்பு மரியாதையுடன் அடக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com