Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட 509 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை கண்டித்து பாமகவினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறை ஒரு சிறப்பு படையை ஒவ்வொரு மாவட்டத்திலேயேயும் அமைத்துள்ளது. அந்தந்த மாவட்டத்தில் நடக்கும் பஸ் எரிப்பு, கல்வீச்சு, மறியல், மரம் வெட்டி சாலையில் போடுவதை கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்த சம்பவங்களில் ஈடுபட்ட பாமகவினர் யார் யார் என்பதை பட்டியல் தயாரிக்கின்றனர்.

ஏற்கனவே பஸ் எரிப்பு, கல்வீச்சு, மறியல், மரம் வெட்டி சாலையில் போடுதல் என ஒவ்வொரு சம்மபவத்திற்கு பிறகும் 5 பேர், 10 பேர் என சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் இருக்கக் கூடியவர்கள், வெளியே இருக்கக் கூடியவர்களில் யார் யார் ஈடுபட்டனர் என்று பட்டியல் தயார் செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் போலீசார்.

ஒவ்வொரு சம்பவத்திலும் குறைந்தது 5 பேரை இச்சட்டத்தில் அடைக்க முடிவு செய்துள்ளதாகவும், சுமார் 100 பேரை இச்சட்டத்தில் அடைக்க போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் போலீஸ் உயரதிகாரகள் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், குரு, ஜி.கே.மணி உள்ளிட்டோரும் அடங்குவர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

0 Responses to ராமதாஸ், அன்புமணி, குரு உட்பட பாமகவினரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு முடிவு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com