Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


நடைபெற்று வரும் 6வது ஐ பி எல் T 20 கிரிக்கெட் போட்டியில், சூதாட்டம் நடைபெற்றதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்திய பந்து வீச்சாளர் ஸ்ரீ சாந்த் டெல்லி போலீசாரால் திடீர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது.

தற்போது ஐ பி எல் சூதாட்டம் பற்றி மெதுவாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளருமான ஸ்ரீ சாந்த் ஷர்மா, டெல்லி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்ந்து அதே அணியின் மற்ற இரண்டு வீரர்களும் கைதாகியுள்ளனர்.

இவர்களுடன் சேர்ந்து, 3 இடைத் தரகர்கள் கைதாகியுள்ளனர், 2 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியும், இவர்களை விசாரிக்கும் பணியும் மிகத் தீவிரமாக் நடை பெற்று வருவதாகத் தெரிய வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் குழுவின் இணை உரிமையாளர் ஷில்பா ஷெட்டி, கைதுகள் தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாகவும் ஆனால் போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராயிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

எங்களது அணியில் இருந்து 3 பேர் கிரிகெட் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து விதமான விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம். விசாரணையில் வீரர்கள் மீது குற்றம் சாற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் கடுமையான நடவடிக்கைககளை சந்திக்க நேரிடும் என ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஐபில் போட்டிகளின் போது ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கிய ஐந்து வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐ பி எல் சூதாட்ட புகாரில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீ சாந்த் டெல்லி போலீசாரால் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com