இந்தியாவின் முதல் பெண் இராணுவ வீராங்கணையாக பணியாற்றி வந்த ஷாந்தி டிக்கா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே பொறியியல் பிரிவு டெரிடோரியல் இராணுவத்தில் பணியாற்றி வந்த 37 வயதான ஷாந்தி டிக்கா, கடந்த வாரம் பணி முடிந்து வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கபப்ட்டு ரயில்வே கம்பத்தில் கட்டிப்போடப்பட்டிருந்தார். ஒரு நாள் இரவு முழுவதும் அவர் அங்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு அலிபுர்தார் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று முன் தினம் இரவு மருத்துவமனை அறையில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் ஜல்பைக்குரியை சேர்ந்த இவர், இந்திய இராணுவ பிரிவின் பெண்கள் படைப்பிரிவில் சேர்ந்தார். கடுமையான பயிற்சி பெற்று முதல் பெண் வீராங்கணையாகவும் தேர்வு பெற்றார். அவருக்கு ஜல்பைகுரி 969 ரயில்வே பொறியியல் படைப்பிரிவில் பாயிண்ட் மேன் பணி வழங்கப்பட்டு இருந்தது. சல்சா ரயில் நிலையத்தில் அவர் பணிபுரிந்து வந்த போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கடத்தப்பட்டு தாக்கப்பட்டு, கம்பத்தில் கட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதால் உடல் சோர்வாக காணப்பட்ட மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இம்முடிவை எடுத்திருக்கலாம் எனும் கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
0 Responses to இந்தியாவின் முதல் பெண் இராணுவ வீராங்கணை தூக்கிட்டு தற்கொலை