Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


மேட்ச்-பிக்ஸிங் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் ஐபிஎல் அணியின் மூன்று வீரர்களில் ஒருவரான அங்கீத் சவான், தான் தவறு செய்திருப்பதை ஒத்துக்கொண்டுள்ளார்.

நேற்று டெல்லி காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்ட போது 'தான் தவறு செய்திருப்பதாகவும், தன்னை வலுக்காட்டாயப்படுத்தியதனாலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார். எனினும் கைது செய்யப்பட்ட பந்துவீச்சாளர் சிறீசாந்த்தின் வழக்கறினர், 'சிறீசாந்த் எந்தவித தவறும் செய்யவில்லை. அவர் தேவையில்லாமல் சூதாட்ட குற்றச்சாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.  அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நேற்று நான் விசாரித்தேன். சிறீசாந்த்துக்கு எதிராக நீதிமன்றத்தில் எந்தவித ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. அவர் மீதான எந்தவித குற்றச்சாட்டும் நேர்மையானவை அல்ல. ஒருவர் மைதானத்தில் எந்தநேரத்திலும் தனது டவலை உபயோகப்படுத்தலாம். அது சாதாரணமாக நடைபெறும் விடயம். அதை எப்படி ஆதாரமாக கருதமுடியும். அதோடு சிறீசாந்த் புகீஸுடன் தொலைபேசியில் பேசியதாக எந்த ஆதாரமும் இல்லை. பேசியது அவரது உறவினரும் இல்லை. ஜனார்த்தனன் என்பவர் அவரது நண்பர் மாத்திரமே. சிறீசாந்த்தை பிணையில் எடுப்பதற்கு நாளை சனிக்கிழமை வழக்கு தாக்கல் செய்ய போவதாக தெரிவித்துள்ளார். மேலும் இவ்விடயத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் ஆனால் ஊடகங்களின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த மேட்ச்-பிக்ஸிங் குற்றச்சாட்டு தொடர்பில் டெல்லி காவல்துறையினர் எடுத்த இரகசிய கண்காணிப்பு நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நாளை சென்னையில் அவசரமாக கூடி இந்த மேட்ச்-பிக்ஸிங் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆலோசனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மேட்ச்-பிக்ஸிங் சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் மீது புகார் கூரியதற்காக சிறீசாந்த்தின் தந்தை மன்னிப்பு கோரியுள்ளார்.

அவர்கள் இருவருமே தனது மகனின் வாழ்வை சீர்குலைக்க இந்த சதிப்புரட்சியை கிளப்பிவிட்டிருப்பதாக அவர் முன்னர் குற்றம் சாட்டியிருந்தார். எனினும் மகன் கைது செய்யப்பட்ட பதற்றத்தில் அப்படி கூறிவிட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் இப்பொது கூறியுள்ளார். இதேவேளை சிறீசாந்த்தின் சொந்த ஊரான கேரளாவில் அவருக்கான ஆதாரவு இன்னமும் பெருகிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. கேரளாவில் பெருமளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் சிறீசாந்த் சூதாட்டத்தில் சிக்கியிருக்க மாட்டார். அவர் ஒரு அப்பாவி என்றே கருத்துக்கூறி வருகின்றனர்.

0 Responses to ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் : தவறை ஒப்புக்கொண்டார் அங்கீத் சவான் : தொடர்ந்து மறுக்கிறார் சிறீசாந்த்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com