Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


கடந்த 2004ம் ஆண்டு ரஜினி ரசிகர்கள் ராமதாசுக்கு கருப்பு கொடி காட்ட முயன்றபோது ரசிகர்  தாக்கப்பட்ட வழக்கில் ராமதாஸ் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.   இந்த வழக்கில் 9 பேர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.   மீதமுள்ள 2 பேரில் ராமதாசும் அவரது கட்சியின் மாவட்ட செயலாளர் இளஞ்செழியன்.   

இளஞ்செழியன் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.  இதையடுத்து அவர் இந்த வழக்கில்  இருந்து விடுவிக்கப்பட்டார். 
 
இந்நிலையில் ராமதாசுக்கு மதுரை நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவை பிறப்பித்து கடந்த வாரம் கைது செய்தது.  இந்த வழக்கில் ராமதாசுக்கு ஜாமீன்கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி ரவி, மனு மீதான விசாரணையை  8.5.2013க்கு ஒத்திவைத்தார்.

0 Responses to ரஜினி ரசிகர் வழக்கு ; மதுரையில் ராமதாஸ் ஜாமீன் மனு தாக்கல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com