இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருக்கும் எம் எஸ் தோனி,
பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு மாடலாக இருக்கிறார் என்பதை உணர்த்தும் ஒரு படம், இப்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதுத் தொடர்பாக இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக, பெங்களூரு நீதி மன்றத்தில் அவர் மீது பொதுநல வழக்கு ஒன்று தாக்கலாகியுள்ளது.
வர்த்தக இதழ் ஒன்றின் அட்டைப்படத்தில் தோனியை இந்துமத கடவுளான விஷ்ணுவின் தோற்றத்தில் சித்தரித்து உள்ளனர். அவரின் கைகளில் பல்வேறு வர்த்தகப் பொருகள் உள்ளது.
அதில் ஷூ ஒரு கையில் இருக்கிறது. இது இந்துக்களின் மத உணர்வுகளையும், கடவுளின் அவதாரத்தை கேலி செய்வது போலவும் உள்ளது என்று பெங்களூருவை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்துள்ளார்.
மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் வருகிற 12ம் திகதி விசாரிக்க உள்ளதாகவும் தெரிய வருகிறது.ஆனால், தோனியின் இந்த படம் சித்தரிக்கப்பட்டதா அல்லது, அவரை மாடலாக்கி எடுக்கப்பட்டதா என்றும், அப்படி சித்தரிக்கப்பட்டது என்றால் கூட தோனிதான் குற்றம் செய்தவர் ஆகிறாரா, என்றெல்லாம் தோனி ரசிகர்கள் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
0 Responses to இந்துமத உணர்வுகளை புண்படுத்தியதாக தோனி மீது பொது நல வழக்கு:பெங்களூரு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!