Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


பௌத்த புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட  இடத்தில் வாழ்பவர்களுக்கு, மாற்றுக் காணியோ அல்லது நஷ்ட ஈடோ வழங்கப்படாது, அவர்கள் வாழ்விடத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென நிர்ப்பந்திக்கபடுவதாகத் தகவல்கள் சில தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அப்பிரதேசத்தில் பல காலமாக வாழ்ந்த மக்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.

இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது;  தம்புள்ளை பௌத்த புனித பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் பல ஆண்டு காலம் வாழ்ந்த மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும், அவர்களுக்கான மாற்று வாழிடங்கள் அல்லது நஷ்டஈடு வழங்கப்படும் என உடன்பாடும் காணப்படிருந்த நிலையில், நேற்று அப்பிரதேசத்தில் வாழும் குடும்பங்களை அழைத்துப் பேசிய  மாவட்ட அரசாங்க அதிபர், மாற்றுக் காணியோ நஷ்ட ஈடோ கேட்காமல் உடனடியாக இடத்தை விட்டு அகலவேண்டும் எனச் சிலகுடும்பங்களிடம் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளைஅப்பகுதியில் வாழும் சில சிங்களக் குடும்பங்களுக்கு மட்டும் மாற்று வாழ்விடம் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், ஏனையவர்கள் எதுவித நஷ்ட ஈடு வழங்கப்படாத நிலையில் ஒருநாள் கால அவகாசத்துக்குள் உடனடியாக இடம்பெயர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

நஷ்ட ஈடுகள் தொடர்பில் முன்னர் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் தொடர்பான ஆவணங்களைக் காட்டிய போது, அவற்றை அதிகாரிகள் நிராகரித்திருப்பதாகவும், இதனால் அப்பகுதியில் பல காலமாக வாழ்ந்த தமிழ் முஸ்லீம் குடும்பங்கள் வாழ்வாதரங்களை ஒரு நாளில் இழந்து தெருவில் நிற்கும் நிலைக்கு வந்திருப்பதாகவும் அச் செய்தித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

0 Responses to பௌத்த புனிதத்தின் பெயரில் வதிவிடங்களுக்கான அச்சுறுத்தல்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com