தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமரானால் இலங்கை
பிரச்சினை முழுமையாக தீரும் என அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர்
நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் நகர
அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை விளக்கப்பொதுக் கூட்டம்
பேருந்து திடலில் நடந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாஞ்சில் சம்பத் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
’’இலங்கை பிரச்சினைகளை தீர்க்க தமிழக முதல்வர் தொடர்ந்து முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது உள்ளிட்ட துணிச்சலான நடவடிக்கைகளால் உலக முழுவதும் வலுவான அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவிற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கையை இனியும் நட்பு நாடாக கருதக் கூடாது என முதல்வர் தெரிவிப்பதை மத்திய அரசு கேட்க வேண்டும்.
கருணாநிதி டெசோ உள்ளிட்ட பயணிக்காத அமைப்புகளின் மூலம் அறிக்கைகள் விட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். இதனை மக்கள் நன்கு அறிவார்கள். மத்திய அரசில் அங்கம் வகித்த காலத்தில் இப் பிரச்சினையை தீர்ப்பதை விட்டு விட்டு இப்போது முதல்வரை வசை பாடுகிறார். இதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
நதி நீர் பிரச்சினை, இலங்கை பிரச்சினை போன்றவற்றை முழுமையாக நீக்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அதற்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி காண வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Eela pirachanai vaithu thangalin elakkai adainthu piragu eelathai kile pottu pottu vidukindraner utharanam Vaiko Ramdas thiruma karuna jayalalitha