சரப்ஜித் சிங் உடல் அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கில் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.
பாகிஸ்தான் சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள்தண்டனைக் கைதியாக லாகூர் சிறையில் இருந்த இந்தியரான சரப்ஜித் சிக், சக கைதிகளால் கடந்த 26ம் திகதி கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்குப் போராடிய நிலையில் லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று பின்னிரவு 1 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை பஞ்சாப் வந்தடைந்த அவரது உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். மத்திய அரசு சார்பாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கலந்து கொண்டார். மத்திய அரசு சரப்ஜித் சிங் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்குவதுடன், சரப்ஜித் சிங் மகள்கள் இரண்டு பேருக்கும் அரசு வேலை தருவதாக வாக்களித்து உள்ளது.
சரப்ஜித் சிங் இறுதி சடங்கில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டார்கள். பஞ்சாப் அமிர்தசரஸ் மக்களே திரண்டு வந்துவிட்டதாக உள்ளூர் நாளிதழ் செய்திகள் தெரிவிகின்றன.
0 Responses to சரப்ஜித் சிங் உடல் அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது:ராகுல்காந்தி கலந்து கொண்டார்!