மலேசியாவில் எதிர்வரும் மே 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள
நிலையில் அங்கு 44 வருடங்களாகத் தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வரும் ஆளும்
கட்சியான ஐக்கிய முன்னணிக் (BN) கட்சியினைத் தோற்கடிப்பதற்கு முன் வருமாறு
எதிர்க்கட்சிகளின் தலைவர் அன்வர் இப்ராஹிம் தேர்தல் பிரச்சாரத்தின் போது
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் சுருக்கம் வருமாறு,
''இப்போது நடைபெறவுள்ள தேர்தலில் எமக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பமானது, நாம் சுதந்திரம் அடைந்த 56 வருடங்களில் முக்கியமான தருணமாகும். இது மலேசியர்களுக்குப் புதிய மலேசியா ஒன்றை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம். எமது நாடு சுதந்திரமானது தான். ஆனால் மிகப்பெரிய சுதந்திரம் என்பது BN போன்ற ஒரு கட்சியின் முறையற்ற ஆட்சியில் இருந்து விடுபடுவது தான்.
நாம் எதிர் நோக்கவுள்ள தேர்தலில் BN கட்சி தனது அழுக்கான யுத்திகளைக் கையாண்டு புதிய பிரதமரை நாம் தேர்ந்தெடுப்பதைத் தடுக்க முயற்சிக்கும். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் தமது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.
வாக்குச் சாவடிகளில் வித்தியாசமான மனிதர்களைக் கண்டால் அல்லது தப்பு நடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால் பொது மக்களாகிய நீங்கள் சற்றும் தாமதிக்காமல் எதிர்க்கட்சியினரான எங்களுக்கு அறிவிக்க வேண்டும். சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரினது வாக்கும் முக்கியமானதே. எனவே வாக்களிப்பு நிலையங்களுக்குத் சற்று முன்னதாகவே வந்து விடுங்கள்.
BN அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாதீர்கள். அவர்கள் பல தசாப்தங்களாக உங்களைப் பயமுறுத்தியே தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இக்கட்சி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் ஐக்கிய மலேசியா பிளவு பட்டு பொருளாதாரமும் பாதிக்கப் படும். இத்தேர்தலில் மிகச்சிறிய பெரும்பான்மையைனை அடைவதற்கே 222 ஆசனங்கள்ல் 122 போதுமானதாகும் எனினும் வெற்றி பெறக் கூடிய எந்தவொரு கட்சியும் 130 ஆசனங்களுக்குக் குறைவாகப் பெற்றால் சுதந்திரமாக ஆட்சி செய்வது இயலாது போய் விடும்! எனினும் எனக்கு இம்முறை தேர்தலில் Umno மற்றும் BN இன் அதிகாரத்தைப் பெற்றுத் தரும் என மிகுந்த நம்பிக்கை உள்ளது.
இத்தேர்தலின் மூலம் மலேசியா சுதந்திரமான பல்லின ஜனநாயகத்தை அனைத்துத் தனிமனிதருக்கும், பூர்வீகக் குடிகளுக்கும், இனங்களுக்கும், சமயங்களுக்கும் கொண்டு சேர்க்க அல்லாஹ் அருள் புரீவானாக..'' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஞாயிறன்று நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் மக்கள் முண்ணனிக்கு வாக்களிப்பதற்கென விஷேட விமானங்கள் மூலம் 40000 வெளிநாட்டவர்கள் மலேசியாவின் சபா மற்றும் சரவாக் வழியாக பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்கானிப்பில் மலேசியாவிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் இதற்கான சரியான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அன்வார் இப்ராஹிம் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மலேசியா தேர்தல்: BN கட்சியின் முறையற்ற ஆட்சியிலிருந்து விடுபடுவதே சுதந்திரம் : அன்வர் இப்ராஹிம்