இந்திய எல்லையில் சீன ஊடுருவல் மேலும் அதிகமாகி கிட்டத்தட்ட 750 கிலோ மீட்டர் தூரம் வரை ஆக்கிரமிப்பு நடத்தி உள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்பு பகுதியில் சாலை அமைக்க சீன அரசு தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்திய எல்லையில் கடந்த வாரம் தமது ஊடுருவலை ஆரம்பித்து வைத்த சீன ராணுவம் எதற்கும் அஞ்சாமல், தமது ஆக்கிரமிப்புப் பகுதியை மேலும் சிறிது சிறிதாக அதிகப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சுமுகத் தீர்வு காண சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன், பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பிரச்சனை நாமாக ஏற்படுத்தியது அல்ல, தாமாக உருவானதுதான் என்றும், இதை சுமுகமாக தீர்க்க இந்திய ராணுவத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ கே அந்தோணி கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவசரமாக விமான படைத் தளபதி விக்கிரம் சிங், பிரதமருடன் இது குறித்து அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் இவர்கள் தீர்வு காண்பதற்குள் சீன ராணுவம் படிப்படியாக இந்தியாவினுள் ஊடுருவி தமது வேலையைக் காண்பிக்கத் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இந்திய எல்லையில் இந்தியாவினுள் 750 கிலோ மீட்டர் தூரம் வரை ஊடுருவி விட்டதாகவும், தாம் ஊடுறுவிய பகுதிகளில் சாலை அமைக்கவும் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Responses to இந்திய எல்லையில் சீன ஊடுருவல் மேலும் அதிகமாகி சாலை அமைக்கும் பணி தீவிரம்?