தமிழக முதல்வர் ஜெயலலிதா வருகிற 24ம் திகதி ஸ்ரீரங்கம் செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தெரிய வருகிறது.
தமிழக முதவர் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தொகுதி ஸ்ரீரங்கம். இங்கு ஆட்சியேற்ற ஒவ்வொரு ஆண்டு நினைவுத் தொடக்கத்தின் போதும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று வழி பட்டு விட்டு, பல்வேறு நலத் திட்டங்களை தொடக்கி வைப்பது வழக்கம்.
இந்த முறையும் அப்படி, ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்து விட்ட நிலையில், அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வரும் 24ம் திகதி ஸ்ரீரங்கம் செல்ல உள்ளார்.
அரசு விழாவில் ரூபாய் 1,200 கோடி மதிப்பிலான தமிழ்நாடு காகித அட்டை தொழிற்சாலை உட்பட பல்வேறு திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
120 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனம், ரூபாய் 100 கோடி மதிப்பிலான சட்டப்பள்ளி போன்ற புதிய பணிகளை தொடங்கி வைக்கிறார். விழாவில் ஏராளமான பேருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இதற்கான விழா ஸ்ரீரங்கம் தெற்கு மற்றும் மேல சித்திரை வீதி சந்திக்கும் இடத்தில் நடைபெறுகிறது. விழாவிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் இடம் மற்றும் மேடை அமைக்கும் பணியை அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, வைத்தியக்லிங்கம் ஆகியோர் நேற்று பார்வையிட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
0 Responses to பல்வேறு நலத்திட்டங்களுக்காக ஶ்ரீரங்கம் பயணிக்கும் தமிழக முதல்வர்