தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட இனப் படுகொலைகளும் அதற்கான ஆதாரங்களும் விவாதங்களும் உலக அரங்கில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஈழத் தமிழ் மக்களுக்கான போராட்டத்திற்கு இன்னும் வலிமை சேர்க்கும் வகையில் தாய்த் தமிழகத்தைச் சேர்ந்த SAVE TAMILS என்னும் அமைப்பு Boycott Sri -Lanka - இலங்கையை புறக்கணிப்போம் என்னும் பிரச்சார போராட்டத்தை தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.
தாயகத்தில் வாழும் எம் உறவுகளுக்கு பேச்சுரிமை இல்லாத நிலையிலும் அவர்களுக்கான தமிழக, புலம் பெயர் தமிழ் மக்களது அறப் போராட்டம் இன்னும் இன்னும் பல் மடங்கு பலம் கொண்டு எழும் என்பதை உலகத்திற்கு இந்த SAVE-TAMILS இளையோர் பறை சாற்றுகின்றனர்.
கடந்த கார்த்திகை மாதம், தாயகத்திலிருந்தும், தமிழகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பல அரசியல் பிரமுகர்களும் தமிழர் அமைப்புகளும் கலந்து கொண்ட உலகத் தமிழர் மாநாட்டை பிரித்தானிய தமிழர் பேரவை லண்டனில் ஏற்பாடு செய்திருந்தது.
அந்த மாநாட்டில், இலங்கைக்கெதிராக பல்வேறு வகையிலும் பல திசைகளிலும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென்றும், தாயகத்தில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்றும் சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கோள்ளப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .இதன் தொடர்ச்சியாக மேற்படி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து இந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை பிரித்தானிய தமிழர் பேரவை தீட்டியது.
அண்மையில் பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்த வேண்டுகோளுக்கமைய தமிழக அமைப்புக்கள் சிறிலங்காவைப் புறக்கணி, சிறிலங்காவின் பொருட்கள், சுற்றுலா மற்றும் கிரிக்கட் என்பனவற்றைப் புறக்கணி என்ற போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன.
இந்த வகையான சிறிய தீப்பொறிகளே, இன்று தமிழ் நாட்டிலும் உலகளவிலும் பெரியதொரு தீப்பந்தமாய் உருபெற்று, எங்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலையினை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட உதவுகின்றது. இது காலத்தின் அவசியம், இதன் அடிப்படையில் வையகப் பரப்பெங்கும் வாழுகின்ற அனைத்து தமிழ் மக்களும், தமிழ் அமைப்புகளும், தமிழ் நாட்டை சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் "Boycott Sri Lanka " போன்ற பரப்புரைகளை முன்னெடுக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம் என தமிழர் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.
0 Responses to இலங்கையை புறக்கணிப்போம்! தமிழக இளைஞர்களின் போராட்டம்!