Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் சிறையில் பாகிஸ்தான் கைதி ஒருவர் நேற்று இந்திய சிறைக்கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் சிறையில் பாகிஸ்தான் சிறைக்கைதி சரப்ஜித் சிங் தாக்கப்பட்டமைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
ஜம்முவில் உள்ள பலத்த பாதுகாப்புமிக்க கோட் பல்வால் சிறையில், பாகிஸ்தானை சேர்ந்த சனாவுல்லா ஹக் எனும் ஆயுள் தண்டனை கைதியே இவ்வாறு சக கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார். அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது குறித்த பகுதியில் உள்ள கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் விரைவில், சண்டிகர் மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ரஜ்னி ஷெகால் உள்ளிட்ட சில சிறைச்சாலை அதிகாரிகள் சேவை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாத சம்பவம் ஒன்றின் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்திய சிறைகளில் சுமார் 200க்கு மேற்பட்ட பாகிஸ்தான் சிறைக்கைதிகள் இருப்பதாகவும், அதே போன்று பாகிஸ்தான் சிறைகளிலும் 200க்கு மேற்பட்ட இந்திய சிறைக்கைதிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் கைதியை தாக்கியவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த வினோத் குமார் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சிறைக்கைதி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா சார்பில் மத்திய அரசு தனது கடும் வருத்தத்தை தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஏனைய சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பாகிஸ்தான் கோரிக்கை விடுள்ளது.

AFP PHOTO/STR

0 Responses to இந்தியச்சிறையில் தாக்குதலுக்கு உள்ளான பாகிஸ்தான் கைதி : ஆபத்தான நிலையில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com