ஜப்பானுக்கான தனது ஒரு நாள் சுற்று விஜயத்தை இரு நாட்களாக நீடித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். இந்திய - சீன எல்லைப்பகுதியான லடக்கில் சீன இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு தொடர்பில் இந்திய மத்திய அரசு எந்தவித பதில் நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜப்பானுடனான உறவை வலுப்படுத்த இந்தியா இதன் மூலம் முனைவது தெளிவாகியுள்ளது.
ஜப்பானின் புதிய பிரதமர் எப் பேயை சந்தித்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பானுக்கு செல்லவிருந்தார் பிரதமர். எனினும் அதை இப்போது இரு நாட்கள் சுற்றுவிஜயமாக நீடித்துள்ளார்.
ஏற்கனவே சீனா - ஜப்பான் இடையே தீவுப்பிரச்சினை வலுப்பெற்றுள்ள நிலையில் இந்தியா ஜப்பானுடன் நெருங்க முன்வைது சீனாவுக்கு நிச்சயம் அழுத்தம் தருவதாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
0 Responses to சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க ஜப்பானுடன் நெருங்கும் இந்தியா