Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் கடந்த மதம் 16ம் திகதி ஊடுருவியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவுக்குள் சுமார் 19 கிலோ மீட்டர் அளவுக்கு ஊடுருவி 5 கூடாரங்கள் அமைத்து அவர்கள் தங்கியுள்ளதாகவும் ஆளில்லாத பகுதிகளில் எப்படி சீன ராணுவம் ஊடுருவியது என்று ஆராய்ந்து பார்த்ததில், அவர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து, எல்லைக்குள் ஊடுருவி உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சீன வீரர்கள் இந்திய மண்ணில் இருந்து உடனே திரும்பி செல்ல வேண்டும் என்று, மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், சீன ராணுவ வீரர்கள் அதை ஏற்கவில்லை. அதற்கு பதில் இந்திவுக்குள் ஊடுருவிய பகுதிகளில் சாலை போடும் பணிகளில் தீவிரம் காண்பித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் சீன ராணுவம் ஏராளமான வீரர்களை குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிழக்கு லடாக் பகுதியில், சீன ராணுவம் எப்படி ஊடுருவியது என்று , இந்திய உயர் ராணுவ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆள் இல்லா உளவு விமானம் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தனர். அப்போது கிழக்கு லடாக்கில் தவுலத் என்கிற இடத்தில் மூன்று பிரிவுகளாக  பிரிந்து, சீன ராணுவ வீரர்கள் ஊடுருவி வந்து இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகவும் திட்டமிட்டு வியூகம் அமைத்து, சீன ராணுவம் இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சீனாவை வெளியேற்ற இதுவரை இரு தரப்பு ராணுவத் தளபதிகளும் 2 முறை நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதனால் இந்த பிரச்னையை எப்படி பேசித் தீர்த்து முடிவு எடுப்பது என்று, மத்திய அரசு திணறி வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்திய பிறகும், மத்திய அரசால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை அடுத்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இன்று சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

0 Responses to காஷ்மீருக்குள் மூன்று வழிகளில் சீன ராணுவம் ஊடுருவியுள்ளது? : இந்தியா தொடர்ந்து மவுனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com