கடந்த சில நாட்களாக
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பல்வேறு பணம் மோசடி வழக்குகள் குவிந்து
வருகிறது. இந்த நிலையில் அவரது இரண்டாவது மனைவி துரியா பெயரில் உள்ள ஆனந்தி
மருத்துவமனை ஊழியர்கள் இன்று (09.05.2013) சென்னை போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி துரியா மீதும் சம்பள பாக்கி
தொடர்பாக 29 பேர் புகார் மனு அளித்தனர்.
ஊழியர்களான எங்களின் ஊதியத்தை பல மாதங்களாக தராமல் நிலுவையில் வைத்துள்ளனர். எங்களுக்கு தரவேண்டிய ஊதியத்தை நேரடியாகவும், தொலைபேசி மூலமும் கேட்டபோது, இன்று தருகிறேன். நாளை தருகிறேன் என்று கூறி இணைப்பை சட்டென்று துண்டித்துவிட்டு ஊதியத்தை தர மறுக்கின்றனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாங்கள்
சேர்மேன் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் அவரது மனைவி
துரியா அவர்களுக்கும் சொந்தமான சென்னை அண்ணா நகரில் உள்ள ஆனந்தி
மருத்துவமனை, பாபா டிரஸ்ட், பாபா கண்ஸ்ரக்ஷன், பாபா குடோன், லத்திகா
மருத்துவமனையில் பணியாற்றி வந்தோம்.
ஊழியர்களான எங்களின் ஊதியத்தை பல மாதங்களாக தராமல் நிலுவையில் வைத்துள்ளனர். எங்களுக்கு தரவேண்டிய ஊதியத்தை நேரடியாகவும், தொலைபேசி மூலமும் கேட்டபோது, இன்று தருகிறேன். நாளை தருகிறேன் என்று கூறி இணைப்பை சட்டென்று துண்டித்துவிட்டு ஊதியத்தை தர மறுக்கின்றனர்.
கிட்டதட்ட
8 மாதங்களுக்கு மேலாக நாங்கள் ஊதியம் இல்லாமல் வேலை பார்த்தோம். இதனால்
எங்கள் குடும்பத்தினரும் நாங்களும் பொருளாதார ரீதியிலும், மனதளவிலும்
பாதிக்கப்பட்டுள்ளோம். இத்தனை மாதங்களாக வருமானமின்றி மிகவும் கஷ்டப்பட்டு
வருகிறோம். எனவே நீங்கள்தான் நிலுவையில் உள்ள எங்கள் ஊதியத்தை
அவர்களிடமிருந்து பெற்று தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு
கூறியுள்ளனர்.
படங்கள்: அசோக்

0 Responses to பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் ஒரு புகார்: சம்பளமே தரவில்லை என ஊழியர்கள் போலீசில் புகார் (படங்கள் இணைப்பு)