Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இன்று வியாழக்கிழமை பாகிஸ்தானிலுள்ள நீதிமன்றம் ஒன்று தனது நாட்டின் சட்ட திட்டங்கள் செல்லாத பழங்குடியினர் பகுதி மீது அமெரிக்க ஆளில்லா விமானமான டிரோன் தாக்குதல் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்துக்கு எதிரானது எனத் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் தனது வெளிநாட்டமைச்சு மூலமாக இத்தாக்குதல்களைத தடுத்து இதற்கான தீர்மானம் ஒன்றைத் தருமாறும் ஐ.நா இடம் விண்ணப்பித்துள்ளது.

அமெரிக்கப் புலனாய்வுத் துறையான CIA இனால் வழிநடத்தப்படும் இந்த துப்பறி (spy) டிரோன் விமானத் தாக்குதல்களில் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப் பட்டு வருவதாகவும் இதனால் அமெரிக்க பாகிஸ்தானிய இராஜதந்திர உறவில் சிக்கல் ஏற்படலாம் என்றும் பேஷ்வாரில் அமைந்துள்ள இந்த உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முஹம்மட் கான் மேலும் கூறுகையில், 'இந்த டிரோன் தாக்குதல்கள் சட்ட விரோதமானவை மட்டுமல்ல. ஐ.நா ஆல் வரையறுக்கப் பட்டுள்ள மனித உரிமைகள் விதிகளுக்கும் புறம்பானவை. மேலும் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதால் இது ஒரு யுத்தக் குற்றமும் ஆகும்.' என்றுரைத்தார்.

மேலும் பாகிஸ்தானிய அரசு வருங்காலத்தில் அமெரிக்காவின் மேலதிக டிரோன் தாக்குதல்களையும் ஒரு போதும் அனுமதிக்காது என்றும் இது குறித்து அரச உறவைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது அமெரிக்காவின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் பழங்குடி எல்லைப் பகுதிகளில் இருந்து ஆப்கானிஸ்தானில் குறுக்கிட்டு அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வரும் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளின் திட்டங்களை தவிடுபொடியாக்கவே அமெரிக்கா அப்பகுதிகளில் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இதை நிறுத்தும் படி கேட்ட பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்கப் போவதில்லை எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

0 Responses to அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல் சட்ட விரோதமானது : பாகிஸ்தான் நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com