Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யும் அரசாங்கத்தின் எண்ணத்தில் எந்தவித மாற்றங்களும் இல்லை என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்கள் செய்வதிலிருந்து அரசாங்கம் பின்வாங்கிவிட்டது என்று வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட 13வது திருத்த சட்டத்தில் திருத்தப்பட வேண்டிய சரத்துக்கள் நிறைய உண்டு. அது தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறோம். விரைவில் திருத்தங்கள் செய்யப்படும் என்றார்.

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்வது என்று அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தில் எந்தவித மாற்றங்களும் இல்லை. அதுபோக, எமது நாட்டின் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் வெளிநாடுகளின் கருத்துக்களை ஒட்டுமொத்தமாக உள்வாங்க முடியாது என்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

 கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் 13வது திருத்த சட்டத்தில் அவசரமாக மாற்றங்களைச் செய்ய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பின்நிற்கிறது என்றும், இந்தியாவின் அழுத்தம் அதில் அதிக பங்காற்றியாகவும் செய்திகள் வெளியாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்; அதில் மாற்றமில்லை: தினேஸ் குணவர்த்தன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com