திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவனோடை வடகாடு
கிராமத்தை சேர்ந்தவர் வெற்றி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை
செயலாளராக உள்ளார். கடந்த 5ம் தேதி இரவு முத்துப்பேட்டையிலிருந்து டூ
வீலரில் நண்பர்களுடன் வெற்றி சென்றார். கந்தபரிசான் ஆறு கரையோரத்தில்
சென்றபோது கார் மோதி அதிலிருந்த 7 பேர் சராமாரியாக வெற்றியை வெட்டியதால்
படுகாயம் அடைந்தார். வெற்றி தற்பொழுது தஞ்சை மருத்துவ கல்லூரி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குற்றவாலிகளை
கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை
எடுக்காததையடுத்து, கடந்த 10ம் தேதி சுடுகாட்டில் காவல் துறையை கண்டித்து
குடியிருப்பு போராட்டம் நடத்தினர். இதில் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் அந்த வழக்கை விபத்து வழக்காக மாற்றி ஒருவரை கைது செய்தது
போலீஸ். இதனால் வெற்றியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில்
வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு இரண்டு வாலிபர்கள் முத்துப்பேட்டை பழைய
பேருந்து நிலையம் அருகில் உள்ள 200 அடி ஏர்செல் டவர் மீது ஏறிநின்று
காவல்துறைக்கு எதிராககோசங்கள் எழுப்பியும், 7 பேரை உடனே கைது செய்யக்
கோரியும், 18 பேர் மீது உள்ள வழக்கை திரும்ப பெறவேண்டும். வெற்றிக்கு
போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோசங்கள் எழுப்பினர்.
நடவடிக்கை
எடுக்காவிட்டால் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று
மிரட்டினார்கள். இதில் ஒரு வாலிபர் ஜம்புவனோடையை சேர்ந்த பெரியசாமி மகன்
பாண்டியன் (27), இன்னொரு வாலிபர் அம்பட்டான் கொல்லையை சேர்ந்த ராஜேந்திரன்
மகன் பெரியநாயகம் (25) என்று தெரியவந்தது. இந்த இரு வாலிபர்களும் தற்கொலை
முயற்சி செய்ய டவரில் ஏரிய சம்பவம் காட்டுத் தீ போல் பரவி பொதுமக்கள்
ஆயிரக்கணக்கானோர் கூடியதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்ப்பட்டு பெறும்
பரபரப்பு ஏற்ப்பட்டது.
தகவல்
அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி. பாஸ்கரன்,
இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்இன்ஸ்பெக்டர் பால்ராஜ், திருத்துறைப்பூண்டி
வட்டாட்சியர் ராஜகோபால் மற்றும் உயர் அதிகாரிகள் இரு வாலிபர்களிடமும்
கீழிருந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தநிலையில்,
கோரிக்கை அடங்கிய துண்டு பேப்பர் ஒன்று மேலிருந்து வாலிபர்கள் வீசினர்.
இதனை பெற்ற அதிகாரிகள் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று கூறியும்
அவர்கள் இறங்கவில்லை. இதனால் தயார் நிலையில் ஏராளமான போலீசார்
குவிக்கபட்டனர். தீயணைப்பு வண்டியும், தீயணைப்பு வீரர்களும்
நிறுத்தபட்டனர். தனியார் ஆம்புலன்ஸ் வாகனமும் நிறுத்தபட்டது. தொடர்ந்து
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோது கடைசியாக விடுதலைசிறுத்தைகள்
கட்சிதலைவர் திருமாவளவன் கூறினால் இறங்குவோம் என்று அடம் பிடித்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதே
போராட்டம் பின்னிரவு 3 மணி வரை நீடித்தது. அதன் பிறகு திருமாவளவன்
தொலைபேசியில் இவர்களிடம் பேசியுள்ளார். "நடவடிக்கை எடுப்பதாக காவல்
துறையினர் உறுதியளித்துள்ளனர். உங்கள் உயிர்கள் முக்கியம் கீழே
இறங்குங்கள்" என்று சொன்னபிறகு அதிகாலை 3 மணிக்கு கீழே இறங்கினார்கள்.
சுமார் 15 மணி நேரம் தண்ணீரின்றி இருந்ததால் மிகவும் கலைப்பாக
இருந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.
- இரா.பகத்சிங்.




0 Responses to திருமா பேசிய பிறகு செல்போன் டவரில் இருந்து இறங்கிய வாலிபர்கள்! 15 மணி நேர திக்... திக்...! (படங்கள் இணைப்பு)