Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காவிரி டெல்டா மாவட் விவசாயிகளின் நீர் பாசனத்துக்காக, மேட்டூர்  ஆகஸ்ட் 12ம்  திறந்துவிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதற்கு முன்னதாக ஆடி 18 விழாவை கொண்டாட இரண்டு நாட்கள் மேட்டூர் அணையில் நீர்  திறந்து விடப்படும் என்றும் தெரிய வருகிறது.

காவிரி டெல்டா பகுதிகளில் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்ய ஏதுவாக தண்ணீர்  திறந்து விடப்படும் என்று, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதோடு சம்பா சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளத் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி  மருந்துகள்  உள்ளது என்றும் கூறியுள்ளார்.

 மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' காவிரியில் நமக்கு உரிய பங்கினை பெறுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. காவிரி நடுவர்  இறுதி ஆணையை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட  செய்ததுடன் காவிரி மேலாண்மை  வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்திடவும் எனது அரசு போராடி வருகிறது. எனவே, காவிரியில் நமக்கு உண்டான நீரை பெற்றே ஆகவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது அறிக்கையில் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால மற்றும் நடுத்தர கால சம்பா சாகுபடி, மேற்கொள்ள ஏதுவாக வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி பாசனத்துக்காக நீர் திறந்துவிடப்படும் என்று மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்,

சம்பா சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதற்கு தேவையான் முன்னேற்பாடு நடவடிக்கைகளை வேளாண்மைத் துறை  எடுக்கும் என்பதையும், விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவை இருப்பில் உள்ளன என்பதையும், விவசாயிகளுக்குத் தேவையான கருவிகளையும் குறைந்த வாடகையில் வழங்க வேளாண்  துறை தயார் நிலையில் உள்ளது என்பதையும்  தெரிவித்து கொள்கிறேன்' என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

0 Responses to காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆகஸ்ட் 12 மேட்டூர் அணையில் நீர் திறப்பு!: ஜெயலலிதா உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com