Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


சுமார் 6.1 ரிக்டர் ஸ்கேலில் செவ்வாய்க்கிழமை வடமேற்கு இந்தோனேசியாவைத் தாக்கிய நில நடுக்கத்தில் 22 பொது மக்கள் கொல்லப் பட்டதாகவும் 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் தேசிய அனர்த்த முகாமை அமைப்புத் தெரிவித்துள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த மனித உயிரிழப்புக்களும் சேதங்களும் 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய சுமாத்திராத் தீவின் மாகாணமான அகெஹ் (Aceh) இலுள்ள பெனெர் மேரியாஹ் மற்றும் மத்திய அகெஹ் ஆகிய மாவட்டங்களில் தான் அதிகம் ஏற்பட்டுள்ளன. 15 விநாடிகளே நீடித்த இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து அச்சத்தில் உறைந்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வெளிகளில் கூடியதுடன் இதனைத் தொடர்ந்து சிறு அதிர்வுகள் ஏற்படலாம் என்பதால் தமது இடங்களுக்குத் திரும்பாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இடிபாடுகளுக்குள் பல மக்கள் சிக்கியிருப்பதனால் மீட்புப் பணிகள் இன்னமும் துரிதமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் பூகம்பம் அகெஹ் மாகாணத்தின் தின் பெனெர் மெரியா எனும் மலைப் பகுதிக்குக் கீழ் பூமிக்கடியில் 10 Km ஆழத்தை மையம் கொண்டு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ரிங் ஆஃப் ஃபைர் (Ring of Fire) எனப்படும் உலகில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் வலயத்தில் இந்தோனேசியா அமைந்திருப்பதுடன் பல எரிமலைகள் அங்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய விதத்தில் இயங்கக் கூடியன என்பதும் குறிப்பிடத்தக்கது.

2004 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் இந்தோனேசியாவில் மட்டும் 170 000 பேர் மரணமடைந்திருந்தனர்.

0 Responses to இந்தோனேசிய நில நடுக்கத்தில் 22 பேர் பலி:200 இற்கும் அதிகமானோர் காயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com